fbpx

அரசு ஊழியர்களுக்கு இனிப்பான செய்தியை அறிவிக்கும் தமிழ்நாடு அரசு..!! தீபாவளிக்கு கன்பார்ம்..!!

கடந்தாண்டு தீபாவளி போனஸ் 25% வழங்க வேண்டும் என போக்குவரத்து ஊழியர்கள் கோரிக்கை வைத்தனர். ஆனால், ரூ.7 ஆயிரத்தை வருமான வரம்பாக கருதி, 10% போனஸாக ரூ.8,400 அறிவிக்கப்பட்டது. மத்திய அரசு ஊழியர்களுக்கு, ஜனவரி மற்றும் ஜூலை மாதத்தில் அகவிலைப்படி சம்பள உயர்வு வழங்கப்படுவதை போலவே, தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கும் அகவிலைப்படி சம்பள உயர்வு வழங்கப்பட வேண்டும்.

ஆனால், நிதி நெருக்கடி மற்றும் கடன் சுமையால் ஊழியர்களுக்கு சரியான நேரத்தில் அகவிலைப்படி உயர்வு வழங்கப்படாமலேயே இருக்கிறது. இந்நிலையில், இந்தாண்டு தீபாவளி பண்டிகயை முன்னிட்டு அரசு ஊழியர்களுக்கு போனஸ் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அரசு போக்குவரத்து ஊழியர்கள் தீபாவளி போனஸாக 20% வழங்க வேண்டும் என்று கடிதம் எழுதி உள்ளனர்.

அந்த கடிதத்தில், கடந்த ஆண்டுகளில் கொரோனாவை காரணம் காண்பித்து 20 சதவீத போனசை 10 சதவீதமாக குறைக்கப்பட்டது. ஆனால், இந்தாண்டு அப்படி செய்யக் கூடாது. போனஸ் தொடர்பான பேச்சுவார்த்தைக்கு அழைக்க வேண்டும். ஒரு மாதத்திற்கு முன்பாகவே முன் பணமாக ரூ.10,000 வழங்க வேண்டும் என போக்குவரத்து துறைக்கு தமிழ்நாடு அரசு போக்குவரத்து ஊழியர்கள் கடிதம் எழுதியுள்ளனர். இதனால், போனஸ் தொடர்பான அறிவிப்பு விரைவில் வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Chella

Next Post

இந்த வாரம் கமலிடம் வசமாக சிக்கப்போகும் பிரதீப்..!! கண்டித்த ஹவுஸ்மேட்ஸ்..!! நடந்தது என்ன..?

Fri Oct 13 , 2023
பிக்பாஸ் சீசன் 7 துவங்கி தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த சீசனில் சண்டை மற்றும் சர்ச்சைகளுக்கு எவ்வித பஞ்சமும் இல்லாமல் சென்று கொண்டிருக்கிறது. இதில் விஷ்ணு, பவா செல்லத்துரை, விக்ரம், யுகேந்திரன், விசித்ரா, பிரதீப், ஜோவிகா, அனன்யா உள்ளிட்ட 18 போட்டியாளர்கள் கலந்துகொண்டனர். ஆனால், கடந்த வாரம் அனன்யா வெளியேற்றப்பட்டார். இதனைத் தொடர்ந்து பாவா செல்லதுரையும் தாமாக முன்வந்து வெளியேறினார். இந்த வாரம் ஸ்மால் பாஸ் வீட்டினர் சமைக்க […]

You May Like