fbpx

ரூ.70,000 சம்பளத்தில் தமிழக அரசு வேலை..!! விண்ணப்பிக்க 2 நாள் தான் இருக்கு..!! மிஸ் பண்ணிடாதீங்க..!!

சென்னை அண்ணாசாலையில் உள்ள தமிழ்நாடு அரசின் எழுதுபொருள் மற்றும் அச்சுத்துறை அலுவலகத்தில் காலியாகவுள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது.

பணியிட விவரங்கள் : ஜூனியர் மெக்கானிக் (01), ஜூனியர் எலக்ட்ரிஷியன் (01), அஸ்சிஸ்டண்ட் ஆஃப்செட் மெஷின் டெக்னிஷியன் (19), சிறப்பு மொழி டிடிபி ஆபரேட்டர் (01), டைம் கீப்பர் (02) என மொத்தம் 24 பணியிடங்கள் நிரப்படுகின்றன.

கல்வி தகுதி : 10ஆம் வகுப்பு அல்லது அதற்கு இணையான படிப்புடன் பணியிடங்கள் சம்பந்தப்பட்ட துறையில் ஐடிஐ படித்து இருக்க வேண்டும். சிறப்பு மொழி டிடிபி ஆபரேட்டர் பணிக்கு பிசிஏ அல்லது பி.எஸ்.சி கம்ப்யூட்டர் சயின்ஸ் உள்ளிட்ட டிகிரியுடன் டைப் ரைட்டிங் திறனும் அவசியம். டைம் கீப்பர் பணிக்கு 10ஆம் வகுப்பு அல்லது அதற்கு இணையான படிப்பு முடித்திருக்க வேண்டும்.

வயது வரம்பு : வயது வரம்பை பொறுத்தவரை 18 வயது முதல் 32 வயதுக்குள் இருக்க வேண்டும். பிசி, எம்.பி.சி. உள்ளிட்ட பிரிவினருக்கு அதிகபட்ச வயது வரம்பு 34 ஆகவும் , எஸ்.சி/எஸ்.டி ஆகிய பிரிவினருக்கு 37 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

சம்பளம் : ஜுனியர் மெக்கானிக், எலக்ட்ரிஷியன், ஆஃப்செட் மெஷின் டெக்னிஷியன் ஆகிய பணியிடங்களுக்கு ரூ.19,500 – ரூ.71,900 வரை சம்பளம் கிடைக்கும். டிடிபி ஆபரேடர் பணிக்கு ரூ.35,600 – ரூ.1,30,800 வரையும் , டைம் கீப்பர் பணிக்கு ரூ.18,200 – ரூ.67,100 வரையும் சம்பளம் வழங்கப்படும்.

தேர்வு முறை : எழுத்துதேர்வு மற்றும் நேர்முகத்தேர்வு

விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி :

எழுதுபொருள் (ம) அச்சுத்துறை ஆணையரகம் 11, அண்ணா சாலை, சென்னை-2 என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

விண்ணப்பங்களை அனுப்ப கடைசி நாள் : 31.01.2024 ஆகும்.

தேர்வு அறிவிப்பை படிக்க https://www.stationeryprinting.tn.gov.in/pdf/B2-21429-2023.pdf
கிளிக் செய்யவும்.

Chella

Next Post

’அடிக்கடி தமிழ்நாட்டிற்கு வந்தால் மட்டும் போதாது’..!! ’இதையும் செய்யணும்’..!! பிரதமர் மோடியை விமர்சித்த நடிகை ரோகிணி..!!

Mon Jan 29 , 2024
தமிழ்நாட்டிற்கு பிரதமர் மோடி அடிக்கடி வந்து சென்றால் மட்டும் பத்தாது என்று நடிகை ரோகிணி தெரிவித்துள்ளார். செய்தியாளர்களிடம் பேசிய அவர், ”பிரதமர் தமிழ்நாட்டிற்கு வருவது மட்டுமின்றி, மாநிலத்திற்குத் தேவையான திட்டங்களையும் வழங்க வேண்டும் என்றார். லோக்சபா தேர்தல் குறித்துப் பேசிய அவர், “எப்போதும் போல எதிர்வரும் லோக்சபா தேர்தலில் நமது தோழர்கள் எங்கெல்லாம் போட்டியிடுகிறார்களோ. அங்கெல்லாம் நான் பிரச்சாரம் செய்வேன். இது லோக்சபா தேர்தலுக்கான பிரச்சாரம் மட்டும் இல்லை. நாம் […]

You May Like