fbpx

தமிழக அரசு அதிரடி… 6 ஐபிஎஸ் அதிகாரிகளை பணியிடமாற்றம் செய்ய உத்தரவு..!!

சென்னை, தமிழக அரசு 6 ஐபிஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து உத்தரவிட்டுள்ளது. அதன்படி காத்திருப்போர் பட்டியலில் இருந்த ஏஜி பாபு காவல் தொழில்நுட்ப பிரிவு ஐஜியாக நியமிக்கப்பட்டுள்ளார். காவலர் பயிர்ச்சி பிரிவு ஐஜியாக, காத்திருப்போர் பட்டியலில் இருந்த ஆனிவிஜயா நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

கடலோர பாதுகாப்பு குழும கண்காணிப்பாளராக காத்திருப்போர் பட்டியலில் இருந்த செல்வகுமார் நியமனம் செய்யப்பட்டுள்ளார். சீருடை பணியாளர் தேர்வு வாரிய கண்காணிப்பாளராக இருந்த ராதாகிருஷ்ணன் சேலம் மாநகர துணை ஆணையராக (தலைமையிடம்) நியமிக்கப்பட்டுள்ளார்.

தென்மண்டல பொருளாதார குற்றப்பிரிவு கண்காணிப்பாளராக இருந்த விஜயகுமார் சீருடை பணியாளர் தேர்வு வாரிய கண்காணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார். குடிமைப் பொருள் சிஐடி பிரிவில் கண்காணிப்பாளராக இருந்த பாஸ்கரன் திருப்பூர் மாநகர துணை ஆணையராக (தலைமையிடம்) நியமனமிக்கப்பட்டுள்ளார்.

Rupa

Next Post

90-களில் உச்சத்தில் இருந்த நடிகை சங்கவியை ஞாபகம் இருக்கா..? இப்ப எப்படி இருக்காங்க தெரியுமா..?

Sat Sep 17 , 2022
செல்வா இயக்கத்தில் 1993-ம் ஆண்டு வெளியான படம் அமராவதி. இப்படம் பாக்ஸ் அபீஸில் நல்ல வசூலை பெற்றது.. இன்றைக்கு தமிழ் சினிமாவின் உச்ச நடிகர்களில் ஒருவராக இருக்கும் அஜித் அமராவதி படத்தின் மூலம் அறிமுகமானார்.. நடிகை சங்கவிக்கும் இது தான் முதல் படம்.. பின்னர் அடுத்தடுத்து பட வாய்ப்புகள் குவிய முன்னணி நடிகையாக சங்கவி வலம் வர தொடங்கினார்.. தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம், ஹிந்தி ஆகிய மொழிகளிலும் நடித்துள்ளார்.. […]

You May Like