இன்று தமிழகத்தின் பல துறைகளில் ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். தமிழகத்தில் ஐஏஎஸ் அதிகாரிகளை இட மாற்றம் செய்து தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு உத்தரவிட்டுள்ளார்.அதுகுறித்த முக்கிய விபரங்கள் பின்வருமாறு,
நில நிர்வாகத்துறை ஆணையர் பீலா ராஜேஷ் எரிசக்தி துறை செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். தற்போது எரிசக்தி துறை செயலாளர் ரமேஷ் சந்த் மீனா சிறப்பு திட்ட செயலாக்கத்துறை செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். திருவண்ணாமலை கூடுதல் ஆட்சியர் பிரதீப் சிங் வணிக வரித்துறை இணை ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.
பட்டுப்புழு வளர்ப்பு இயக்குநர் விஜயராணி கூட்டுறவுத்துறை கூடுதல் பதிவாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.எரி சக்தி நிறுவன நிர்வாக இயக்குநர் ஆசியா மரியம் சிறுபான்மையினர் நலத்துறை இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார். ஊரக வளர்ச்சி இணை செயலாளர் சந்திர சேகர் சஹாமுரி பட்டுப்புழு வளர்ப்பு இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார். நகர்புற உட்கட்டமைப்பு நிதி சேவைகளின் தலைவராக விஜயகுமார் நியமிக்கப்பட்டுள்ளார். மேலும் இவருக்கு அடையார் கூவம் மறுசீரமைப்பு திட்ட சிறப்பு அதிகாரி பொறுப்பும் கூடுதலாக வழங்கப்பட்டுள்ளது.