fbpx

தமிழ்நாடு அமைதியான மாநிலம்!… குழப்பத்தை ஏற்படுத்தினால் காது கொடுத்து கேட்டுக்கொண்டிருக்க முடியாது!… சுப்ரீம் கோர்ட்!

தமிழ்நாடு அமைதியான மாநிலம், போலி வீடியோக்களை பரப்பி குழப்பத்தை ஏற்படுத்தினால், இதற்கு எல்லாம் நாங்கள் காது கொடுத்து கேட்டு கொண்டிருக்க முடியாது என்று உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி கருத்து தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் வடமாநிலத் தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக போலி வீடியோக்களைப் பரப்பியது தொடர்பாக யூடியூபர் மணிஷ் காஷ்யப் மீது தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதனை எதிர்த்து அவர் தொடர்ந்த வழக்கை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட், நீதிபதி பி.எஸ்.நரசிம்ஹா மற்றும் நீதிபதி ஜே.பி.பார்திவாலா ஆகியோர் அடங்கிய அமர்வு யூடியூபர் மணிஷ் காஷ்யப்பின் மனுவை விசாரித்தது. தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் காவலில் வைக்கப்பட்டிருப்பதை ரத்து செய்யக் கோரிய அவரது மனுவை ஏற்க மறுத்த நீதிமன்றம், நிவாரணம் கோருவதற்கு உயர் நீதிமன்றத்தை நாடவும் அறிவுறுத்தியுள்ளது.

வழக்கு விசாரணையின்போது குற்றம்சாட்டப்பட்ட காஷ்யபின் சார்பாக மூத்த வழக்கறிஞர் மணிந்தர் சிங், உச்ச நீதிமன்றத்தில் ஆஜரானார். “சில முக்கிய செய்தித்தாள்களால் வெளியிடப்பட்ட செய்தி அறிக்கைகளின் அடிப்படையில் அவர் வீடியோக்களை வெளியிட்டார். மேலும், அவர் தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட வேண்டும் என்றால், அந்த செய்திகளை வெளியிட்ட பத்திரிகையாளர்களும் கைது செய்யப்பட வேண்டும்” என காஷ்யப் தரப்பு வாதம் முன்வைத்தது. தமிழ்நாடு அரசு சார்பாக ஆஜரான மூத்த வழக்கறிஞர் கபில் சிபல், “தமிழ்நாட்டில் பதிவு செய்யப்பட்ட எஃப்.ஐ.ஆர்களை சேர்த்து விசாரிக்கக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தை அணுகுவதற்கான மாற்று வழி மனுதாரருக்கு உள்ளது. மனுதாரர் ஒரு பத்திரிகையாளர் அல்ல. பீகாரில் தேர்தலில் போட்டியிட்ட அரசியல்வாதி” என்றார்.

இரு தரப்பு வாதத்தை கேட்ட தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட், “தமிழ்நாடு ஒரு நிலையான அமைதியான மாநிலம். நீங்கள், எதையாவது பரப்பி குழப்பத்தை ஏற்படுத்தினால், இதற்கு எல்லாம் நாங்கள் காது கொடுத்து கேட்டு கொண்டிருக்க முடியாது. என்ன செய்ய வேண்டும்? நீங்கள் இந்த போலி வீடியோக்களை உருவாக்கியுள்ளீர்கள்” என்றார்.

Kokila

Next Post

காஸ்ட்லியான பிராண்டெட் சரக்கு!... பார்ட்டி வைத்து பணிநீக்கம் செய்த நிறுவனம்!... ஊழியர்கள் ஷாக்!

Tue May 9 , 2023
அமெரிக்காவை சேர்ந்த நிறுவனம் ஒன்று தனது ஊழியர்களுக்கு பார்ட்டி வைத்து பணிநீக்கம் செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த சில மாதங்களாகவே பல்வேறு நிறுவனங்கள் தங்களது ஊழியர்களை ஆட்குறைப்பு செய்வதாக அறிவித்து பல்லாயிரக்கணக்கான ஊழியர்களை பணிநீக்கம் செய்து வருகின்றன. மைக்ரோசாப்ட், கூகுள், அமேசான் போன்ற பெரு நிறுவனங்கள் தொடங்கி நடுத்தர மற்றும் சிறு நிறுவனங்கள் வரை பல்வேறு நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களை ஆட்குறைப்பு செய்துள்ளன. உலகளவில் பொருளாதார மந்தநிலை […]

You May Like