fbpx

அடுத்த 3 மணி நேரத்திற்கு தமிழகத்தில் வெளுத்து வாங்க போகும் மழை..!

தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக இன்று முதல் 29-ம் தேதி வரை தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இடி,மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதனையடுத்து தமிழகத்தில் உள்ள 35 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, திருவள்ளூர், தர்மபுரி, ஈரோடு, சேலம், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, காஞ்சிபுரம், சென்னை, கடலூர், கிருஷ்ணகிரி, நாமக்கல், சிவகங்கை, கோயம்புத்தூர், நீலகிரி, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், அரியலூர், திருச்சி, பெரம்பலூர், தஞ்சாவூர், திருவாரூர், கன்னியாகுமரி, மயிலாடுதுறை, நாகப்பட்டினம், புதுக்கோட்டை, திருப்பூர், கரூர், திண்டுக்கல், தேனி, விருதுநகர், தென்காசி, மதுரை ஆகிய மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Kathir

Next Post

உஷார்..!! ராட்சத சக்கரத்தில் சிக்கிய பெண்ணின் தலைமுடி..!! திருவிழாவில் திகில் சம்பவம்..!!

Sun Sep 24 , 2023
குஜராத் மாநிலம் ஸ்ரீ ஸ்ரீராம் மெலோ திருவிழாவின் போது பெண் ஒருவரின் தலைமுடி பெர்ரிஸ் சக்கரத்தில் சிக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்த பெண்ணின் தலைமுடி சிக்கியதும் உதவிக்காக கத்தி கூச்சலிட்டார். பின்னர், உடனடியாக சவாரி நிறுத்தப்பட்டு, அவரை காப்பாற்றும் முயற்சி மேற்கொள்ளப்பட்டது. அந்த வீடியோவில், உள்ளூர்வாசிகள் அவரது தலைமுடியை பெர்ரிஸ் சக்கரத்திலிருந்து விடுவிக்க முயற்சிப்பதைக் காட்டுகிறது. அதிர்ச்சியூட்டும் சம்பவத்தின் அருகே பார்வையாளர்கள் கூறி வருகின்றன. இதை தங்களது செல்போனில் […]

You May Like