fbpx

தமிழகமே அதிர்ச்சி..!! பட்டாசு ஆலையில் பயங்கர வெடிவிபத்து..!! 100 பேரின் கதி..? நெருங்க முடியாமல் தவிக்கும் தீயணைப்புத்துறை..!!

தென்காசி அருகே பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்து காரணமாக அருகில் உள்ள மக்காச்சோள வயல்கள் பற்றி எரிவதால், ஆலையில் சிக்கி உள்ள 100 பேரின் கதி என்ன என்பது கேள்விக்குறியாகி உள்ளது.

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அடுத்த திருவேங்கடம் அருகே மைப்பாறை பகுதியில் ஏவிஎம் பட்டாசு ஆலை செயல்பட்டு வருகிறது. இங்கு எப்பொழுதும் 100-க்கும் மேற்பட்ட பணியாளர்கள் வேலை செய்வது வழக்கம். இன்று காலையும் வழக்கம் போல் பணியாளர்கள் பட்டாசு தயாரிக்கும் வேலையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது திடீரென பட்டாசு ஆலையில் வெடி விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

பட்டாசு ஆலையில் ஏற்கனவே நூற்றுக்கணக்கான கிலோ பட்டாசுகள் சேமித்து வைக்கப்பட்டிருந்த குடோனிலும் இந்த வெடிவிபத்தில் தீ பற்றியதாக தெரிகிறது. இதனால் அடுத்தடுத்து பட்டாசுகள் வெடித்து சிதறியது. அப்போது, அருகில் உள்ள அறுவடை செய்யப்பட்ட சோள வயல்களில் விழுந்ததால், வயல்களும் தீப்பிடித்து எரிந்து வருகிறது. இதனால் தீயணைப்புத் துறையினர் வெடி விபத்து ஏற்பட்ட ஆலையினருகே செல்ல முடியாமல் தவித்து வருகின்றனர்.

தீ சற்று தணிந்தால் மட்டுமே அருகில் சென்று பார்க்க முடியும் என தீயணைப்புத் துறையினரும், போலீசாரும் தெரிவித்துள்ளனர். இதனால் ஆலையில் பணியாற்றிக் கொண்டிருந்த நூற்றுக்கும் மேற்பட்டோரின் கதி என்ன என்பது இதுவரை தெரியவில்லை. இதனால் அந்த பகுதியில் ஏராளமான பட்டாசு ஆலை தொழிலாளர்களின் குடும்பத்தினர் கவலையுடன் கூடியுள்ளனர். தீயணைப்புத் துறையினர் தற்போது தீயை அணைக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். 4 ஆம்புலன்ஸுகள் தயார் நிலையில் அங்கு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

Read More : IPL பார்க்க செல்பவர்கள் பேருந்துகளில் இலவசமாக பயணிக்கலாமா..? தமிழ்நாடு அரசு பரபரப்பு விளக்கம்..!!

Chella

Next Post

ADMK | ’நேரம், நாள், இடம் குறியுங்கள்’..!! ’எத்தனை பேரை வேண்டுமானாலும் கூப்பிடுங்கள்’..!! அண்ணாமலைக்கு கோவை அதிமுக வேட்பாளர் சவால்..!!

Sat Mar 23 , 2024
“கோயம்புத்தூர் வளர்ச்சிக்காக பேச நான் தயார். அண்ணாமலை தயாரா…? தயார் என்றால் நேரம், நாள், இடம் குறியுங்கள். வருகிறேன்” என்று கோவை தொகுதி அதிமுக வேட்பாளர் சிங்கை ராமச்சந்திரன் சவால் விடுத்துள்ளார். கோவையில் அதிமுக வேட்பாளர்கள் அறிமுக கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் கோவை, பொள்ளாச்சி, நீலகிரி ஆகிய தொகுதிகளின் வேட்பாளர்கள் அறிமுகம் செய்யப்பட்டனர். இந்த நிகழ்வில் பேசிய கோவை தொகுதி அதிமுக வேட்பாளர் சிங்கை ராமச்சந்திரன், சக வேட்பாளரான […]

You May Like