fbpx

தமிழகமே எதிர்பார்ப்பு..!! இறுதி விசாரணையை தொடங்கிய தேர்தல் ஆணையம்..!! இரட்டை இலை யாருக்கு சொந்தம்..?

அதிமுகவின் இரட்டை இலை சின்னம் யாருக்கு என்பது தொடர்பான இறுதி விசாரணையை தேர்தல் ஆணையம் தொடங்கியுள்ளது.

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியும், ஓ.பன்னீர்செல்வமும் எதிரும், புதிருமாக இருப்பதால், இருதரப்புமே இரட்டை இலை சின்னத்திற்கு உரிமை கோரி வருகின்றனர். சுப்ரீம் கோர்ட் உத்தரவுப்படி, இரு தரப்பினரிடம் இருந்தும் ஆவணங்களை தேர்தல் ஆணையம் பெறுகிறது. மேலும், இரு தரப்பு ஆதரவாளர்களிடம் விசாரணையில் நடத்தவுள்ளன. தேர்தல் ஆணையத்தின் முடிவு அதிமுகவின் எதிர்கால அரசியலை நிர்ணயிக்கலாம் என்று கருதப்படுகிறது.

எடப்பாடி பழனிசாமியை பொறுத்தவரை அதிமுகவின் பெரும்பான்மை உறுப்பினர்களின் எங்கள் பக்கம் இருப்பதாக கூறி வருகிறார். மேலும், இரட்டை இலை சின்னம் தங்களுக்கு தான் சொந்தம் என கூறி தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார். மற்றொரு பக்கம் ஓபிஎஸ் தரப்பினர் அதிமுகவின் உண்மையான தொண்டர்கள் தங்களுக்கு ஆதரவாக இருப்பதாகவும், சின்னம் தங்களுக்கு தான் கிடைக்க வேண்டும் என்றும் கூறி வருகின்றனர்.

எனவே, இரட்டை இலை சின்னம் யாருக்கு கிடைக்கும் என்பதில் பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. சின்னம் யாருக்கு கிடைத்தாலும், அது அதிமுகவின் எதிர்கால அரசியலில் முக்கிய பங்கு வகிக்கும். தேர்தல் ஆணையம் இரு தரப்பினரின் வாதங்களையும், ஆவணங்களையும் ஆய்வு செய்து, சரியான முடிவை எடுக்கும் என்று கூறப்படுகிறது. இந்த முடிவு அதிமுகவின் எதிர்கால அரசியலை தீர்மானிக்கும் முக்கிய நிகழ்வாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.

Read More : கோடை காலத்தில் உங்கள் லேப்டாப், கணினியை பாதுகாப்பது எப்படி..? இந்த தவறை மட்டும் பண்ணவே கூடாது..!! வெடிக்கும் அபாயம்..!!

English Summary

The Election Commission has begun its final investigation into who owns the AIADMK’s two-leaves symbol.

Chella

Next Post

மன பூர்வமாக மன்னிப்பு கேட்கிறேன்.. எனது பேச்சால் பலருக்கு தலைகுனிவு...!! - அமைச்சர் பொன்முடி

Sat Apr 12 , 2025
I sincerely apologize.. My speech offended many people...!! - Minister Ponmudi

You May Like