fbpx

வரும் 30-ம் தேதி வரை லேசான மழை பெய்யக்கூடும்…! வானிலை மையம் தகவல்…!

தமிழகத்தில் 30-ம் தேதி வரை லேசான மழை பெய்யக்கூடும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது ‌‌.

இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்; குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி நேற்று வலுவிழந்தது. மேலும் குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக இன்று முதல் 30-ம் தேதி வரை தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். மேலும் வரும் 31-ம் தேதி தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.

சென்னையை பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 30 முதல் 31 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 24 முதல் 25 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும் என கூறப்பட்டுள்ளது.

Vignesh

Next Post

பெற்றோர்களே கவனம்...! 6 முதல்‌ 18 வயதுடைய குழந்தைகளுக்கு..! வரும் 11-ம் தேதி வரை நடைபெறும் என அறிவிப்பு...!

Wed Dec 28 , 2022
வரும் 11ம் தேதி வரை செல்லாத மாணவர்களை கண்டறியும் பணியானது நடைபெற உள்ளது. ஒவ்வொரு ஆண்டும்‌ 6 முதல்‌ 18 வயதுடைய பள்ளிசெல்லா/ இடைநின்ற குழந்தைகள்‌ மற்றும்‌ மாற்றுத்திறன்‌ கொண்ட குழந்தைகளை கண்டறிய சிறப்புக்‌ கணக்கெடுப்பு பணி மேற்கொள்ளப்படுகிறது. இதில்‌ கண்டறியப்படும்‌ சூழந்தைகளுக்கு ஒருங்கிணைந்த பள்ளிக்‌ கல்வியின்‌ கீழ்‌ சிறப்புப்‌ பயிற்சி மையங்கள்‌ மூலம்‌ கல்வி வழங்கப்பட்டு வருகிறது. இது ஒரு தொடர்‌ பணியாகும்‌. கணக்கெடுப்பிற்கான தரவுகள்‌ அனைத்தையும்‌ உள்ளீடு […]

You May Like