fbpx

குடை ரெடியா? தமிழகத்தில் ஒரு வாரத்திற்கு மழை வெளுக்க போகுது..!! – வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

தமிழகத்தில் 7 நாட்களுக்கு இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் அரபிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று வீசுவதால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.

இதுதொடர்பாக வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதனால், தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இன்றும், நாளையும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

அதேபோல், தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் வரும் 7ஆம் தேதி முதல் 10ஆம் தேதி வரை லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கடலோர தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், உள் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் வரும் 11ஆம் தேதி லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 32-33° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 25-26° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.

தென்கிழக்கு அரபிக்கடலின் வடக்கு பகுதிகள், அதனை ஒட்டிய மத்திய கிழக்கு மற்றும் தென்மேற்கு அரபிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். ஆகையால் இப்பகுதிகளுக்கு இன்று (5-12-2024) மீனவர்கள் செல்ல வேண்டாம் என்று வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தி உள்ளது.

Read more ; அப்பாவுக்கு எதிரான அவதூறு வழக்கை வாபஸ் பெற்றது அதிமுக.. முடித்து வைத்தது உச்சநீதிமன்றம்!!

English Summary

Tamil Nadu Meteorological Department has said that light to moderate rain with thunder and lightning may occur for 7 days.

Next Post

அதிர்ச்சி..!! கழிவுநீர் கலந்த குடிநீர்..!! 3 பேர் பரிதாப மரணம்..!! எடப்பாடி பழனிசாமி கடும் கண்டனம்..!!

Thu Dec 5 , 2024
AIADMK General Secretary Edappadi Palaniswami has condemned the death of three people after drinking water contaminated with sewage.

You May Like