fbpx

RIP | தமிழக அமைச்சர் மு.பெ.சாமிநாதனின் தந்தை காலமானார்..!! முதலமைச்சர் முக.ஸ்டாலின் இரங்கல்..!!

RIP | திருப்பூர் மாவட்டம் வெள்ளக்கோவிலை அடுத்த முத்தூரில் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதனின் தந்தை சா.பெருமாள்சாமி கவுண்டர் (94) இன்று காலமானார். திருப்பூர் திமுக கிழக்கு மாவட்ட பொறுப்பாளர், திமுக உயர்நிலை செயல் திட்டக் குழு உறுப்பினர், மாநில தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதனின் சொந்த ஊர் முத்தூராகும். முத்தூர் வேலம்பாளையம் பங்களா தோட்டத்தில் அமைச்சரின் தந்தை சா.பெருமாள்சாமி கவுண்டர் (94) வசித்து வந்தார்.

அவர் வயது மூப்பு, உடல்நலம் குறைவு காரணமாக கோவை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி மருத்துவமனையிலேயே வெள்ளிக்கிழமை காலை 8 மணியளவில் உயிரிழந்தார். அவருடைய இறுதிச் சடங்கு முத்தூர் வேலம்பாளையத்தில் உள்ள அமைச்சரின் பூர்வீக வீட்டில் நடைபெறவுள்ளதாக கூறப்படுகிறது.

சா.பெருமாள்சாமிக்கு அமைச்சர் மு.பெ.சாமிநாதன் உள்பட 2 மகன்களும், ஒரு மகளும் உள்ளனர். அமைச்சர் மு.பெ. சாமிநாதனின் தந்தை மறைவுக்கு முதலமைச்சர் முக.ஸ்டாலின் தனது இரங்கலைத் தெரிவித்துள்ளார்.

English Summary : Tamil Nadu Minister MU Saminathan’s father passed away

Read More : லோக்சபா தேர்தலை டார்கெட் செய்யும் Vijay..!! கிட்டத்தட்ட நெருங்கியாச்சு..!! பிரம்மாண்ட மாநாடு எப்போது..?

Chella

Next Post

விபத்தில் சிக்கிய சரத்குமார் சென்ற கேரவன்.! 13 பேருக்கு காயம்.!

Fri Feb 23 , 2024
நடிகர் சரத்குமாரின் கேரவன் மீது பேருந்து மோதியதில், பேருந்தில் சென்ற 13 பேருக்கு காயம் ஏற்பட்ட சம்பவம் பதற்றம் அடைய செய்திருக்கிறது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள திருப்பத்தூர் அருகே உள்ள ஸ்ரீ காமாட்சி அம்மன் கோவிலில் கும்பாபிஷேக விழா நடைபெற்றது. இந்த விழாவில் கலந்து கொள்வதற்காக நடிகர் சரத்குமாருக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது இந்த கும்பாபிஷேக விழாவிற்கு நடிகர் சரத்குமார், அவரது மகள் வரலட்சுமி மற்றும் குடும்பத்தினர் சிலரும் கலந்து கொண்டனர். […]

You May Like