fbpx

ஆசையோடு சென்னை வரும் ஜே.பி.நட்டாவுக்கு அதிர்ச்சி கொடுத்த தமிழக அரசியல் தலைவர்கள்..!! செம அப்செட்டாம்..!!

நாடாளுமன்ற தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. தேர்தலுக்கு இன்னும் 2 மாதங்கள் மட்டுமே எஞ்சியுள்ளதால் அனைத்து கட்சிகளும் தயாராகி வருகிறது. திமுக தனது கூட்டணி கட்சிகளுடன் முதல்கட்ட தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தையை தொடங்கியுள்ளது. வரும் நாட்களில் கூட்டணி கட்சிகளுக்கான தொகுதிகள் ஒதுக்கப்பட உள்ளது. அதே நேரத்தில் அதிமுகவும் கூட்டணிக்கான பேச்சுவார்த்தையை தொடங்கியுள்ளது. ஆனால், இதுவரை அதிமுகவுடன் எந்த கட்சியும் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை.

தனித்து விடப்பட்ட பாஜக சிறிய கட்சிகளை இணைத்து மெகா கூட்டணியை அமைப்போம் என்று அண்ணாமலை கூறி வருகிறார். இந்நிலையில், பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா நாளை பிற்பகலில் சென்னை வருகிறார். சென்னை வரும் அவர் காட்டாங்கொளத்தூரில் உள்ள ஓட்டலில் பாஜக நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்துகிறார். அப்போது நாடாளுமன்ற தேர்தல் தொடர்பாக பல்வேறு ஆலோசனைகளை அவர் வழங்க உள்ளார்.

தொடர்ந்து கூட்டணி கட்சி தலைவர்களையும் சந்திக்க ஜே.பி.நட்டா திட்டமிட்டுள்ளார். இந்த சந்திப்புக்கு முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அமமுக பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன், தமாகா தலைவர் ஜி.கே.வாசன், புதிய நீதிக்கட்சி தலைவர் ஏ.சி.சண்முகம், ஐஜேகே நிறுவனர் பாரிவேந்தர் ஆகிய 5 பேர் மட்டுமே சம்மதம் தெரிவித்துள்ளனர். அதே நேரத்தில் அதிமுக கூட்டணியில் இருந்து வெளியேறி விட்டது. பெரிய கட்சிகளான பாமக, தேமுதிக உள்ளிட்ட கட்சி தலைவர்கள் ஜே.பி.நட்டா சந்திப்பை புறக்கணித்துள்ளனர்.

அதுமட்டுமின்றி, கடந்த முறை கூட்டணியில் உள்ள புதிய தமிழகம் கட்சி தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமியும் சந்திப்பை புறக்கணிக்க உள்ளார். பாமக, தேமுதிக, புதிய தமிழகம் தலைவர்களுடன் தமிழக பாஜக தலைவர்களை தொடர்பு கொண்டு பேச முயன்றனர். ஆனால் அதற்கு 3 கட்சிகளின் தலைவர்களும் பிடி கொடுக்கவில்லை. அவர்கள் சந்திப்பதை தவிர்த்து விட்டனர். இதனால், எதிர்பார்த்த பெரிய கட்சி தலைவர்கள் வராததால், சிறிய கட்சிகளின் தலைவர்கள் மட்டும் ஜே.பி.நட்டாவை சந்திப்பது பாஜக கூட்டணிக்கு மிகப்பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.

அதுமட்டுமின்றி, 5 பேர் மட்டுமே சந்திக்க வாய்ப்பு உருவாகியுள்ளதைப் பார்த்து ஜே.பி.நட்டாவும் கடும் அதிர்ச்சியடைந்துள்ளார். இதனால் அவர்களை மட்டுமே சந்தித்துப் பேசுகிறார். மேலும், சென்னை வரும் ஜே.பி.நட்டா நாளை மாலை வடசென்னை மின்ட்டில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பங்கேற்று பேசுகிறார்.

Chella

Next Post

"பஞ்சாப் மாநிலத்தில் ஆம் ஆத்மி தனித்துப் போட்டி.." - மம்தாவை தொடர்ந்து காங்கிரஸ்சை புறக்கணித்த அரவிந்த் கெஜ்ரிவால்.!

Sat Feb 10 , 2024
வருகின்ற பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு மேலும் ஒரு பின்னடைவு ஏற்பட்டிருக்கிறது. காங்கிரஸ் கட்சி தலைமையில் உருவாகி இருக்கும் இந்தியா கூட்டணியில் இடம் பெற்றுள்ள ஆம் ஆத்மி பஞ்சாப் மாநிலத்தின் அனைத்து பாராளுமன்ற தொகுதிகளிலும் தனித்து போட்டியிட போவதாக அறிவித்திருக்கிறது. இது காங்கிரஸ் கட்சிக்கு மிகப்பெரிய பின்னடைவை ஏற்படுத்தியிருக்கிறது. பஞ்சாப் மாநிலத்தில் ஆம் ஆத்மி கட்சி ஆட்சி செய்து வருகிறது. அங்கு ரேஷன் பொருட்களை வீடுகளுக்கு சென்று வழங்கும் நிகழ்ச்சி […]

You May Like