fbpx

தமிழக ரேஷன் கடையில் காலிப்பணியிடங்கள்..!! விண்ணப்பிக்க கடைசி தேதி இதுதான்..!! வெளியான முக்கிய அறிவிப்பு..!!

தமிழ்நாடு ரேஷன் கடைகளில் காலியாக உள்ள விற்பனையாளா், கட்டுநா் காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

இது குறித்து கூட்டுறவு சங்கங்களின் பதிவாளா் என்.சுப்பையன் வெளியிட்டுள்ள அறிவிப்பில், ”தமிழ்நாட்டில் உள்ள ரேஷன் கடைகளில் காலியாகவுள்ள விற்பனையாளா், கட்டுநா் காலிப் பணியிடங்களை கணக்கிட்டு அறிவிக்க வேண்டும். இந்தப் பணியை கூட்டுறவு சங்கங்களின் அலுவலா்கள் மேற்கொள்ள வேண்டும்.

வேலைவாய்ப்பு அலுவலகத்தில் இருந்து தகுதியான விற்பனையாளா்கள், கட்டுநா்களின் பட்டியலைப் பெற வேண்டும். இந்தப் பணிகளை அக்.7ஆம் தேதிக்குள் முடித்து, காலிப் பணியிடங்களுக்கான தோ்வு குறித்த அறிவிப்பை செய்தித்தாள்களில் வெளியிட வேண்டும்.

விண்ணப்பிக்க நவம்பா் 7ஆம் தேதியை கடைசி நாளாக அறிவித்து, தகுதியுள்ள நபா்களைத் தோ்வு செய்து அவா்களுக்கான நோ்முகத் தோ்வை நவம்பா் இறுதியில் நடத்தி முடிக்க வேண்டும். டிசம்பா் 3-வது வாரத்தில் தோ்வானவா்களின் இறுதிப் பட்டியலை வெளியிட்டு பணிகளை நிறைவு செய்ய வேண்டும்” என்று அதிரடியாக உத்தரவிட்டுள்ளாா்.

Read More : பிக்பாஸில் நடந்த அதிரடி மாற்றம்..!! 24 மணிநேரத்தில் வெளியேற்றப்பட்டது இந்த போட்டியாளரா..?

English Summary

The Tamil Nadu government has ordered to fill the vacant posts of salesman and builder in Tamilnadu ration shops.

Chella

Next Post

இயற்கை உபாதைக்கு சென்ற இரண்டு பெண்கள் பலாத்காரம்.. அதிர்ச்சியில் பெண் எடுத்த விபரீத முடிவு..!!

Mon Oct 7 , 2024
Two friends went out to defecate, an incident happened in the forest. the next day the body of one of them was found hanging from a tree.

You May Like