fbpx

தமிழ்நாடு உரிமைகள் திட்டம்… இல்லம் தேடி மாற்றுத்திறனாளிகள் கணக்கெடுக்கும் பணி..!

தருமபுரி மாவட்டத்தில் தமிழ்நாடு உரிமைகள் திட்ட (TN-RIGHTS) களப்பணியாளர்கள் மூலம் கணக்கெடுப்பு பணி நடைபெற்று வருகிறது.

தமிழ்நாடு உரிமைகள் திட்டம் மாற்றுத்திறனாளிகள் நலத்துறையால் மாற்றுத்திறனாளிகளுக்காக பிரத்தியேகமாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் ஒரு நடவடிக்கையாக அனைத்து வகையான மாற்றுத்திறனாளிகளையும் கணக்கெடுப்பு மேற்கொண்டு சமூகத் தரவு தளத்தை உருவாக்க திட்டமிடப்பட்டுள்ளது.

தருமபுரி மாவட்டத்தில் தமிழ்நாடு உரிமைகள் திட்ட (TN-RIGHTS) களப்பணியாளர்கள் மூலம் 12.03.2025 முதல் இக்கணக்கெடுப்பு பணி நடைபெற்று வருகிறது. கணக்கெடுக்கும் பணிக்காக உங்கள் இல்லம் தேடி வருவார்கள் கணக்கெடுக்கும் பணிக்கு தேவைப்படும் தகவல்களை தயக்கமின்றி வழங்கி ஒத்துழைப்பு வழங்குமாறும், கணக்கெடுப்பில் கலந்துக் கொள்வதின் மூலம் மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சமூக தரவுப் பதிவுகளில் இடம் பெற மாற்றுத்திறனாளிகளுக்கு இது ஒரு அரிய வாய்ப்பு. உங்களுக்குத் தெரிந்த மாற்றுத்திறனாளிகளுக்கு இந்த தகவலை பகிர்ந்து உதவிட வேண்டும்.

மேலும் விவரங்கள் தேவையிருப்பின் மாவட்ட ஆட்சியர் அலுவக வளாகத்தில் உள்ள மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தின் தொலைபேசி எண்களில் 04342-230050. 97862 64979 மற்றும் 99628 83837-ல் தொடர்பு கொள்ள வேண்டும். தருமபுரி மாவட்டத்திலுள்ள அனைத்து மாற்றுத்திறனாளிகளும் இக்கணக்கெடுப்பில் பங்கு பெறுமாறு மாவட்ட ஆட்சியர் வலியுறுத்தி உள்ளார்.

Read More: பஹல்காம் தாக்குதல் விவகாரத்தில் மக்களின் விருப்பத்தை பிரதமர் மோடி நிறைவேற்றுவார்!. வலுவான பதிலடி கொடுக்கப்படும்!. ராஜ்நாத் சிங் உறுதி!

English Summary

Tamil Nadu Rights Project… Survey of differently-abled people searching for homes

Vignesh

Next Post

சூப்பர் வாய்ப்பு..! 35 வயது பூர்த்தியாகி இருந்தால் போதும்... ரூ.15 லட்சம் வரை வழங்கும் தமிழக அரசு..!

Mon May 5 , 2025
You can apply for a subsidy from the Tamil Nadu government to start business-related businesses.

You May Like