fbpx

இன்று வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும்!! நாளை முதல் 3 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு!

தமிழ்நாட்டில் இன்று வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வெயில் மற்றும் மழை தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் தென்தமிழக பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. தென்மேற்கு பருவமழை கேரளாவில் பெரும்பாலான பகுதிகளிலும், தென்தமிழகத்தின் சில பகுதிகளிலும் தொடங்கியுள்ளது. இதன் காரணமாக இன்று தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி, காரைக்காலில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் ஜூன் 1ஆம் முதல் 3ஆம் தேதி வரை கனமழை பெய்யக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜூன் 1 முதல் 2ஆம் தேதி வரை தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கிருஷ்ணகிரி, தருமபுரி, திருப்பத்தூர், சேலம், ஈரோடு, நீலகிரி, கோயம்புத்தூர் மாவட்ட மலைப்பகுதிகள், திருச்சிராப்பள்ளி மற்றும் நாமக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது என்று வானிலை மையம் கூறியுள்ளது. மேலும் ஜூன் 3ஆம் தேதி தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். திருப்பத்தூர், வேலூர், இராணிப்பேட்டை மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜூன் 1ஆம் தேதி முதல் 3ஆம் தேதி வரை அதிகபட்ச வெப்பநிலை, தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் (1-2° செல்சியஸ்) சற்று குறைந்து, இயல்பை ஒட்டியும்/இயல்பை விட சற்று அதிகமாகவும் இருக்கக்கூடும் என்றும், இன்று முதல் ஜூன் 1ஆம் தேதி வரை குமரிக்கடல் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென்தமிழக கடலோரப்பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Read More: ‘AI இமேஜின்’ அம்சத்தை அறிமுகம் செய்யும் வாட்ஸ்அப்..!!

Rupa

Next Post

மோதல்!… இந்திய ராணுவ வீரர்கள் 16 பேர் மீது வழக்கு!… காஷ்மீர் போலீசார் அதிரடி!

Fri May 31 , 2024
Indian Soldiers: காஷ்மீர் குப்வாராவில் காவல்நிலையத்திற்குள் நுழைந்து தாக்குதல் நடத்திய இந்திய ராணுவ வீரர்கள் 16 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். ஜம்மு – காஷ்மீர் மாநிலம் குப்வாரா மாவட்டத்தில் உள்ள காவல்நிலையத்தில் கடந்த செவ்வாய் கிழமை அன்று போதைப்பொருள் வழக்கு தொடர்பாக ராணுவ வீரர் ஒருவரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ராணுவ வீரர்கள் காவல்நிலையத்திற்குள் அத்துமீறி நுழைந்து காவலர்கள் மீது தாக்குதல் நடத்தினர். […]

You May Like