fbpx

தமிழ்நாட்டில் 5 நாட்களுக்கு கனமழை வெளுத்து வாங்கப்போகுது..!! எங்கெங்கு தெரியுமா..? வானிலை ஆய்வு மையம் சொன்ன குட் நியூஸ்..!!

தமிழ்நாட்டில் அடுத்த 5 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இன்று தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் கன்னியாகுமரி, நெல்லை, தென்காசி, தேனி, திண்டுக்கல், வேலூர், இராணிப்பேட்டை மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாளை (செப்டம்பர் 4) தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் நெல்லை, தென்காசி, கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யும் என்றும் வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. அதேபோல், நாளை மறுநாள் (செப்டம்பர் 5) தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும் என்றும் கோவை மாவட்டத்தின் மலை பகுதிகள், நீலகிரி, தேனி மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல், செப்.6ஆம் தேதி தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் கோவை மாவட்டத்தின் மலை பகுதிகள் மற்றும் நீலகிரியில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யும் என்றும் கூறப்படுகிறது. செப்.7ஆம் தேதி தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் கோவை மாவட்டத்தின் மலை பகுதிகள், நீலகிரி, திருப்பூர், தேனி மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Chella

Next Post

”இந்த படத்தில் நடிப்பதற்காக விஜய்யை மிரட்டிய சசிகலா”..!! பிரபலம் சொன்ன அதிர்ச்சி தகவல்..!!

Sun Sep 3 , 2023
நடிகர் விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் லியோ. இப்படம் அக்டோபர் 19ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. லியோ படத்தை தொடர்ந்து தனது 68ஆவது படத்தில் நடிக்க கமிட்டானார் விஜய். அந்த படத்தை வெங்கட் பிரபு இயக்க ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கிறது. யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். இந்நிலையில், விஜய்யும், வெங்கட் பிரபுவும் அமெரிக்கா சென்றிருக்கிறார்கள். அங்கு 3டியில் விஜய்யின் முழு உடலும் ஸ்கேன் செய்யப்படும் புகைப்படம் […]

You May Like