fbpx

தமிழக பெண்கள் ஆவலுடன் எதிர்பார்த்திருந்த மாதம் ரூ.1000 வழங்கும் திட்டம்.. விரைவில் குட்நியூஸ்

குடும்ப தலைவிக்கு மாதம் ரூ.1000 உரிமைத்தொகை வழங்கும் திட்டம் குறித்து புதிய தகவல் வெளியாகி உள்ளது..

திமுக ஆட்சிக்கு வந்தால், குடும்ப தலைவிக்கு மாதம் 1,000 ரூபாய் உரிமைத் தொகை வழங்கப்படும் என அக்கட்சி தேர்தல் வாக்குறுதி அளித்திருந்தது.. எனவே எப்போது இந்த உரிமைத் தொகை வழங்கப்படும் என்று பெண்கள் மத்தியில் எதிர்பார்ப்பு அதிகரித்தது.. ஆனால், திமுக ஆட்சிக்கு வந்து ஒன்றரை ஆண்டுகளுக்கு மேல் ஆகியும் இன்னும் அந்த திட்டம் தொடங்கப்படவில்லை. எனவே இந்த திட்டத்தை உடனடியாக செயல்படுத்த வேண்டும் என்று கோரிக்கைகள் எழுந்தன.. எனினும் குடும்பத்தலைவிக்கு மாதம் ரூ.1,000 உரிமைத் தொகை வழங்கப்படுவது உறுதி என்று முதலமைச்சர் ஸ்டாலின் தொடர்ந்து கூறி வருகிறார்..

மேலிட உத்தரவுக்காக காத்திருக்க வேண்டாம்..! காவல்துறைக்கு அதிரடி உத்தரவிட்ட முதல்வர்..!

இதனிடையே தமிழகத்தில் மொத்தம் உள்ள 2.20 கோடி அரிசி குடும்ப அட்டைதாரர்களில், 14.60 லட்சம் ரேஷன் அட்டைதாரர்களுக்கு வங்கிக்கணக்கு தொடங்கப்படாமல் உள்ளது கண்டறியப்பட்டது.. எனவே வங்கிக்கணக்கு தொடங்கப்படாமல் உள்ள கார்டுதாரர்களை, அந்தந்த பகுதியில் உள்ள மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகளில் புதிய கணக்கு தொடங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் கூட்டுறவு துறை வாய்மொழி உத்தரவு பிறப்பித்ததாக ஏற்கனவே தகவல்கள் வெளியானது.

இந்நிலையில் குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 உரிமைத்தொகை வழங்கு திட்டம் குறித்த அறிவிப்பை மார்ச் 8-ம் தேதி வெளியிட தமிழக அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.. விரைவில் இதற்கான கணக்கெடுப்பு பணிகளை முடிக்க முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளதாகவும் தெரிகிறது.. கணக்கெடுப்பு பணிகள் முடிந்ததும் உடனடியாக இந்த திட்டம் செயல்படுத்தப்படும் என்று கூறப்படுகிறது.. இதற்கான அறிவிப்பை முதலமைச்சர் ஸ்டாலின் அதிகாரப்பூர்வ வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது..

Maha

Next Post

NRI-களும் ஆதார் அட்டைக்கு எளிதாக விண்ணப்பிக்கலாம்.. எப்படி தெரியுமா..?

Sun Jan 22 , 2023
ஆதார் அட்டை இந்தியாவின் மிக முக்கியமான அடையாள ஆவணங்களில் ஒன்றாகும். அரசின் திட்டங்களை பெறுவது தொடங்கி குழந்தைகளை பள்ளியில் சேர்ப்பது வரை அனைத்திற்குமே ஆதார் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.. எனினும் வெளிநாடுகளில் வசிக்கும் ஒரு வெளிநாடு வாழ் இந்தியர் (NRI) ஆதார் அட்டைக்கு விண்ணப்பிக்க முடியுமா இல்லையா என்பது பலரின் சந்தேகமாக உள்ளது.. ஆனால் செல்லுபடியாகும் இந்திய பாஸ்போர்ட்டைக் கொண்ட என்ஆர்ஐ எந்த ஆதார் மையத்திலிருந்தும் விண்ணப்பிக்கலாம் என்பதை UIDAI உறுதிப்படுத்தியுள்ளது. மேலும் […]

You May Like