பொதுவாக சித்திரை மாதம் முதல் நாளை தான் தமிழ் புத்தாண்டாக தமிழர்கள் கொண்டாடிய வருகிறார்கள் உலகம் முழுவதும் ஆங்கில புத்தாண்டின் போது கொண்டாட்டங்கள் ஆரவாரமாக இருந்தாலும் இந்த தமிழ் புத்தாண்டு தமிழர்களுக்கு மட்டுமே சிறப்பு வாய்ந்த நாளாக இருக்கிறது.
முன்னாள் முதல்வர் கருணாநிதி பொங்கல் தினத்தன்று தமிழ் புத்தாண்டாக கொண்டாட வேண்டும் என்று விரும்பினார். அதற்கான நடவடிக்கைகளையும் மேற்கொண்டார், ஆனால் அதற்கு பொதுமக்களிடையே நல்ல வரவேற்பு கிடைக்காததால் அவர் அதனை கைவிட்டார்.
இந்த நிலையில் தான் தமிழ்நாடு முழுவதும் நாளை தமிழ் புத்தாண்டு கொண்டாடப்பட இருக்கிறது. அதனை சுட்டிக்காட்டி ஆண்டுதோறும் தமிழகத்தில் பொது விடுமுறை வழங்கப்படுவது வழக்கமான ஒன்றுதான். அந்த விதத்தில், இந்த வருடம் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு நாளை சித்திரை மாதம் முதல் நாள் பொது விடுமுறை என்று அறிவித்து தமிழக அரசு செய்தி வெளியிட்டுள்ளது.
புத்தாண்டு நாளை வெள்ளிக்கிழமையும், அதற்கு அடுத்து சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை என்று வரிசையாக விடுமுறை தினங்கள் வருவதால் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு 3 நாட்கள் தொடர்ந்து விடுமுறை வழங்கப்படுகிறது. இந்த நிலையில் பொதுமக்கள் தங்களுடைய சொந்த ஊருக்கு செல்வதற்கு வசதியாக சென்னையில் இருந்து மற்ற மாவட்டங்களுக்கு சிறப்பு பேருந்துகள் இன்று இயக்கப்படுகின்றனர் என்று சொல்லப்பட்டுள்ளது.