பஞ்சாப் மாநிலம் பாட்டியாலாவில் உள்ள ஒரு மருத்துவமனையில் தமிழகத்தைச் சேர்ந்த நவநீதகிருஷ்ணன் ராணுவ மருத்துவராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் ஜூன் 16ஆம் தேதி பாட்டியாலாவிலிருந்து சங்கரூருக்கு திரும்பிக் கொண்டிருந்தபோது, பக்ரா கால்வாயில் ஒரு பெண் தவறி விழுந்து நீரில் மூழ்கி கொண்டிருப்பதைக் கண்டார். அப்போது அங்கிருந்த யாரும் காப்பாற்ற முன்வராத நிலையில், வேகமாக தண்ணீர் ஓடும் கால்வாயில் குதித்த ராணுவ வீரர் நவநீதகிருஷ்ணன் தனது உயிரையும் பொருட்படுத்தாமல் துணிச்சலாக நீரில் மூழ்கிய பெண்ணைக் காப்பாற்றினார். இவரது தன்னலமற்ற செயலை ராணுவ தலைமை தளபதி நேரில் பாராட்டினார். இதுதொடர்பாக ட்விட்டரில் பதிவிட்டுள்ள தமிழக முதல்வர் முக ஸ்டாலின், “இன்னல் நேரும் தருணத்தில் தன்னுயிர் பாராமல் பஞ்சாப் மாணவியின் உயிரைக் காப்பாற்றிய ராணுவ வீரர் நவநீதகிருஷ்ணனை வாழ்த்துகிறேன், பாராட்டுகிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.
Next Post
பிக்பாஸ் கவினின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா..? ஒரு படத்திற்கு இத்தனை கோடியா..?
Thu Jun 22 , 2023
You May Like
-
2023-12-26, 11:44 am
இனி ஈசியா உடல் எடையை குறைக்கலாம்..!! தினசரி வெறும் 5 நிமிடம் மட்டும் போதும்..!!
-
2022-10-25, 1:12 pm
சென்னையில் காற்று மாசு அதிகரிப்பு …
-
2023-07-04, 3:47 pm
சும்மா சும்மா பிரச்சனை பண்ணிட்டே இருக்க நீ…..? கணவனை போட்டு தள்ளிய மனைவி….!
-
2024-03-07, 8:25 am
முட்டையில் இருந்து பிறக்கும் மனிதக் குழந்தைகள்!… வைரலாகும் AI உருவாக்கிய படம்!
-
2022-07-04, 9:45 am
கொரோனா 4-வது அலை..? நேற்று ஒரே நாளில் 16,135 பேருக்கு தொற்று உறுதி..