fbpx

தமிழக மீனவர்கள் கைது… நீதிமன்றம் விதித்த அபராதம்…! மத்திய அரசுக்கு முதலமைச்சர் கடிதம்…!

இலங்கை நீதிமன்றத்தால் மீனவர்கள் மீது விதிக்கப்பட்ட அபராதத் தொகையினை தள்ளுபடி செய்யவும் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டி மத்திய வெளியுறவுத் துறை அமைச்சருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்; முதலமைச்சர் ஸ்டாலின் நேற்று (05.09.2024) இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்ட மீனவர்களையும், அவர்களது மீன்பிடிப்படகுகளையும் விடுவித்திடவும், மீனவர்கள் மீது விதிக்கப்பட்ட அபராதத் தொகையினை தள்ளுபடி செய்யவும் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டி மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் அவர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார்.

அக்கடிதத்தில் தமிழ்நாட்டு மீனவர்களின் வாழ்வாதாரத்தை ஆழமாக பாதிக்கும் கவலைக்குரிய விஷயத்தை மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் அவர்களின் கவனத்திற்கு கொண்டு வருவதாக குறிப்பிட்டுள்ள முதலமைச்சர் ஸ்டாலின் தமிழ்நாட்டு மீனவர்கள் தங்களது பாரம்பரிய மீன்பிடிப் பகுதிகளில் மீன் பிடித்துக் கொண்டிருக்கும்போது அடிக்கடி கைது செய்யப்படுவது அவர்களது வாழ்வாதாரத்தை மிகவும் பாதிப்பதாகக் குறிப்பிட்டுள்ளதுடன், தமிழ்நாட்டின் புதுக்கோட்டையைச் சேர்ந்த 4 மீனவர்களை அவர்களது மீன்பிடிப் படகுடன் (பதிவு எண்.IND-TN-08-MM-1418) இலங்கைக் கடற்படையினர் சிறைபிடித்துள்ளதாகவும் தனது கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

இந்தப் பாரம்பரிய மீன்பிடிப் பகுதிகள் தமிழ்நாட்டு மீனவர்களுக்கு பல தலைமுறைகளாக வாழ்வாதாரமாக திகழ்வதாகவும், மீனவர்கள் அடிக்கடி கைது செய்யப்படுவதும் படகுகள் பறிமுதல் செய்யப்படுவதும் தமிழ்நாட்டு மீனவர் சமூகத்தினருக்கு மிகுந்த துயரத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும், 21-07-2024 அன்று IND- TN-12-MM-5900 என்ற பதிவெண் கொண்ட படகில் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது கைது செய்யப்பட்ட 12 தமிழ்நாட்டு மீனவர்களுக்கு இலங்கை நீதிமன்றம் 03-09-2024 அன்று 1.5 கோடி ரூபாய் அபராதம் விதித்ததாகவும், இது ஏற்கனவே துயரத்தில் உள்ள மீனவ குடும்பங்களை மிகவும் வேதனைக்குள்ளாக்குவதுடன் அவர்களுக்கு மிகப்பெரிய இழப்பையும் ஏற்படுத்தும் என்று தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். மத்திய வெளி உறவுத்துறை அமைச்சர் உடனடியாக மீனவர்களை விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

English Summary

Tamilnadu fishermen arrested… fine imposed by court…! Chief Minister’s letter to Central Govt

Vignesh

Next Post

பாராலிம்பிக்!. 25வது பதக்கத்தை வென்றது இந்தியா!. ஜூடோவில் அதிசயம் செய்த கபில் பர்மர்!.

Fri Sep 6 , 2024
Paralympics! India won the 25th medal! Kapil Parmar who did a miracle in Judo!.

You May Like