fbpx

பொதுத்தேர்வுகள் 2024: வழிகாட்டுதல் நெறிமுறைகளை வெளியிட்ட பள்ளி கல்வித்துறை.!

தமிழகத்தில் 10, 11, 12 வகுப்புகளுக்கான பொதுத் தேர்வுகள் வருகின்ற மார்ச் மாதம் முதல் நடைபெற இருக்கிறது. 12-ஆம் வகுப்பு பொதுத் தேர்வு மார்ச் மாதம் 1-ஆம் தேதி தொடங்கி மார்ச் 22-ல் முடிகிறது.11-ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகள் மார்ச் மாதம் 4-ஆம் தேதி தொடங்கி 25 -ஆம் தேதி முடிவடைகிறது. 10-ஆம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வு மார்ச் 26-ல் தொடங்கி ஏப்ரல் மாதம் 8-ஆம் தேதி முடிவடைய உள்ளது.

இந்நிலையில் பொது தேர்வுகள் தொடர்பாக பள்ளிகளுக்கு வழிகாட்டு நெறிமுறைகளை பள்ளிக்கல்வித்துறை வகுத்திருக்கிறது. பொது தேர்வுகளின் போது பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் மற்றும் தேர்வுகளுக்கான கண்காணிப்பாளர்கள் நியமிக்கப்படுவது தொடர்பான நெறிமுறைகளை பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது. இந்த வழிகாட்டுதல்களின் அடிப்படையில் தேர்வுகள் நடத்தப்பட வேண்டும் என்றும் அறிவுறுத்தி இருக்கிறது.

இந்த புதிய வழிகாட்டுதல்களின் படி அரசு பள்ளி ஆசிரியர்கள் மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளின் ஆசிரியர்கள் மட்டுமே தேர்வு மையம் முதன்மை கண்காணிப்பாளராக நியமிக்கப்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தேர்வு நடைபெறும் மையங்களின் முதன்மை கண்காணிப்பாளராக அரசு தலைமை ஆசிரியர்கள் மூத்த ஆசிரியர்கள் மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் நியமிக்கப்பட வேண்டும்.

மேலும் தேர்வு மைய கண்காணிப்பாளராக தனியார் பள்ளி தலைமை ஆசிரியர்களை நியமிக்க கூடாது என பள்ளி கல்வித்துறை தெரிவித்துள்ளது. தேர்வு கண்காணிப்பாளராக நியமிக்கப்படுபவர்கள் தேர்வு நடைபெறும் பாடத்தின் ஆசிரியராக இருக்கக் கூடாது என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது . மேலும் கண்காணிப்பாளர்களை குழுக்கள் முறையில் தேர்வு செய்ய வேண்டும் எனவும் பள்ளி கல்வித்துறை தனது வழிகாட்டுதல் நெறிமுறையில் தெரிவித்திருக்கிறது.

Next Post

’மீண்டும் ஒருமுறை சீமான் மானத்தை வாங்க வருகிறேன்’..!! ’இந்தவாட்டி சம்பவம் பெருசா இருக்கும்’..!! விஜயலட்சுமி பரபரப்பு வீடியோ..!!

Thu Feb 8 , 2024
நடிகை விஜயலட்சுமி மீண்டும் ஒரு பரபரப்பு வீடியோவை வெளியிட்டுள்ள நிலையில், இது சீமான் ஆதரவாளர்கள் மத்தியில் மீண்டும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளரான சீமான் தன்னைத் திருமணம் செய்து கொள்வதாக கூறி ஏமாற்றிவிட்டதாக நடிகை விஜயலட்சுமி கடந்த 2011ஆம் ஆண்டு பரபரப்பைக் கிளப்பினார். பிறகு சீமான் தரப்பு சமாதானம் பேசியதும் அமைதியாகிவிட்டார். சற்றே இடைவெளி விட்டு மீண்டும் இந்த விஷயத்தைப் பற்றி பேசி பரபரப்பு கிளப்பினார். இப்படி […]

You May Like