தமிழ்நாட்டில் இடி, மின்னலுடன் மழை வெளுத்து வாங்கப்போகுது..!! பிரதீப் ஜான் சொன்ன குட் நியூஸ்..!!

தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில், இன்று மாலை சென்னையில் இடி, மின்னலுடன் மழை பெய்யும் என்று தனியார் வானிலை ஆர்வலரான பிரதீப் ஜான் கூறியுள்ளார்.

கடந்தாண்டை போல இந்தாண்டு தமிழ்நாட்டில் வெயிலின் தாக்கம் தீவிரமாக இல்லை. குறிப்பாக, அக்னி நட்சத்திரம் தொடங்கியதில் இருந்து மழை பரவலாக பெய்து வந்தது. தமிழ்நாட்டிலேயே சென்னையில்தான் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. இப்படி இருக்கையில், தற்போது மழை பெய்ய தொடங்கியுள்ளது. இதனால் சென்னையில் வெயிலின் தாக்கம் வெகுவாக குறைந்துள்ளது. நேற்று இடி, மின்னலுடன் லேசான மழை பெய்தது.

இந்நிலையில் இன்றும் மழை பெய்யும் என தனியார் வானிலை ஆர்வலரான தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் கூறியுள்ளார். இது குறித்து தனது எக்ஸ் பதிவில், “காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு, சென்னை மாவட்டங்களில் இன்று மாலை அல்லது இரவில் இடி, மின்னலுடன் மழை பெய்யும்” என்று கூறியுள்ளார். முன்னதாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டிருந்த அறிவிப்பில், “தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. எனவே, இன்று தொடங்கி 15ஆம் தேதி வரை தமிழ்நாட்டில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று தெரிவித்துள்ளது.

Read More : அமைச்சர் செஞ்சி மஸ்தான் முக்கிய பொறுப்பில் இருந்து விடுவிடுப்பு..!! திமுக தலைமை அறிவிப்பு..!!

English Summary

It has been raining in Tamil Nadu for the past few days. In this case, Pradeep John, a private meteorologist, has said that it will rain in Chennai this evening with thunder and lightning.

Chella

Next Post

இப்படி ஒரு மோசடியா..? இனியும் சும்மா இருக்கா மாட்டோம்..!! சுற்றுலா பேருந்துகளுக்கு பகிரங்க எச்சரிக்கை..!!

Tue Jun 11 , 2024
A warning has been given that action will be taken against those found guilty of charging like a bus and picking up and dropping off passengers from various states.

You May Like