fbpx

கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் 3-ம் தேதி வரை வீசப் போகும் கனமழை…! வானிலை மையம் தகவல்…!

தமிழகத்தில் வரும் 3-ம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.

ஆந்திர கடலோரப்பகுதிகளின்‌ மேல்‌ நிலவும்‌ வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக இன்று மற்றும் நாளை தமிழ்நாடு, புதுவை மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளில்‌ ஒரு சில இடங்களில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய லேசானது முதல்‌ மிதமான மழை பெய்யக்கூடும்‌. வரும் 2-ம் தேதி மற்றும்‌ 3-ம் தேதி தமிழ்நாடு, புதுவை மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளில்‌ ஓரிரு இடங்களில்‌ லேசானது முதல்‌ மிதமான மழை பெய்யக்கூடும்‌.

சென்னையை பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம்‌ ஓரளவு மேகமூட்டத்துடன்‌ காணப்படும்‌. நகரின்‌ ஒரு சில பகுதிகளில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்‌. அதிகபட்ச வெப்பநிலை 33 டிகிரி செல்‌சியஸ்‌ மற்றும்‌ குறைந்தபட்ச வெப்பநிலை 26 முதல் 27 டிகிரி செல்சியஸ்‌ அளவில்‌ இருக்கக்கூடும்‌.

வரும் 3-ம் தேதி வரை தென்‌ கிழக்கு மற்றும்‌ அதனை ஓட்டிய தென்‌ மேற்கு வங்கக்கடல்‌ பகுதிகளில்‌ சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல்‌ 45 கிலோ மீட்டர்‌ வேகத்துலும்‌ இடையிடையே 55 கிலோ மீட்டர்‌ வேகத்தில்‌ வீசக்கூடும்‌. மன்னார்‌ வளைகுடா மற்றும்‌ அதனை ஒட்டிய தென்‌ தமிழக கடலோரப் பகுதிகளில்‌ சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல்‌ 55 கிலோ மீட்டர்‌ வேகத்திலும்‌ இடையிடையே 65 கிலோ மீட்டர்‌ வேகத்தில்‌ வீசக்கூடும்‌ என்பதால் மீனவர்கள் கடல் பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Vignesh

Next Post

கவனம்.. நீங்கள் இஞ்சி டீ குடிப்பவரா..? இந்த உடல்நலப் பிரச்சனைகள் ஏற்படலாம்...

Fri Sep 30 , 2022
இஞ்சி ஒரு பயனுள்ள உணவுப்பொருள் ஆகும்.. ஆன்டிஆக்ஸிடன்ட்கள் மற்றும் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகளால் நிரம்பிய, மனிதர்களின் ஆரோக்கியத்தை பெரிய அளவில் மேம்படுத்துகிறது. இஞ்சி அழற்சி எதிர்ப்பு மற்றும் புற்றுநோய்க்கு எதிரானது மற்றும் நுண்ணுயிரிகளுக்கு எதிரான உயிரியல் சேர்மங்களைக் கொண்டுள்ளது. தினமும் பல்வேறு வடிவங்களில் இஞ்சியை உட்கொள்வதால் பல நன்மைகள் உள்ளன.. அந்த வகையில் இஞ்சி டீ பிடிக்காது என்று சொல்பவர்கள் மிகமிக குறைவு… குறிப்பாக குளிர்காலத்தில் இஞ்சி டீயை விரும்பி […]
பால் விலை உயர்வு எதிரொலி..!! டீ, காஃபி விலை அதிரடி உயர்வு..!! பொதுமக்கள் அதிர்ச்சி..!!

You May Like