fbpx

தமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு தொடர்ந்து கனமழை பெய்யும்….! சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்…!

தமிழகத்தில் அடுத்த மூன்று நாட்களுக்கு மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக இன்று மற்றும் நாளை தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.நாளை மறுநாள் தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். வரும் 17-ம்‌ தேதி தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

சென்னையை பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 37 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 28 முதல் 29 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும்.

வரும் 14 முதல் 17ம் தேதி வரை கர்நாடக கடலோர பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய மத்திய கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.வடக்கு ஆந்திர கடலோரப் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய மத்திய மேற்கு வங்க கடல் பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.

Vignesh

Next Post

உங்களுக்கு தொப்பை அதிகரிக்க முக்கிய காரணம் என்ன தெரியுமா...? அவசியம் தெரிந்திருக்க வேண்டும்...!

Sun Aug 14 , 2022
இன்றைய காலகட்டத்தில் உடல் பருமன் என்பது பெரும் பிரச்சனையாகவே மாறிவிட்டது. ஆம், குறிப்பாக கொரோனா காரணமாக பலர் தங்களின் வீடுகளில் எந்த அசைவும் இல்லாமல் அமர்ந்த இடத்தில இருந்தே வேலை செய்து வருவதால் அவர்களின் உடல் எடை அதிகரித்து விட்டது. தற்போது அதிகரித்த எடையை எப்படி குறைப்பது என்று தெரியாமல் பலர் திண்டாடி வருகின்றனர். உடல் எடையை மொத்தமாக குறைப்பதை விட தொப்பையை மட்டும் குறைப்பது மிகவும் கடினமான ஒன்றாக […]

You May Like