தமிழ்நாடு ஸ்ட்ரீட் ப்ரீமியர் லீக் (TSPL) கிரிக்கெட் உலகில் புதிய பரிமாணம் சேர்க்கும் வகையில், T10 டென்னிஸ் பால் கிரிக்கெட் போட்டியை அறிமுகப்படுத்துகிறது. இந்த நிகழ்வு ஸ்ட்ரீட் கிரிக்கெட் வீரர்களுக்கு தங்களது திறமைகளை கிரிக்கெட் மைதானங்களில் காட்டும் வாய்ப்பை வழங்குகிறது. இதன் மூலம் கிரிக்கெட் போட்டிகள் மேம்படுவதாகவும், புதிய அனுபவங்கள் தருவதாகவும் எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிகழ்வை ஸ்ட்ரீட் கிரிக்கெட் அபிவிருத்தி பெர்சன் (SCDFI) நிறுவனம் ஏற்பாடு செய்துள்ளது, மேலும் இந்த போட்டி நாளைய தினம் ( மார்ச்-5) திருச்சி விருந்தில் உள்ள கொங்குநாடு இன்ஜினியரிங் கல்லூரி மைதானத்தில் தொடங்கப்படுகிறது. இந்நிகழ்வின் திறப்பு விழாவில், பல முக்கிய தலைவர்களும் கலந்து கொள்கிறார்கள். எஸ் சுவாமிநாதன் அறக்கட்டளையின் முதன்மை விஞ்ஞானி டாக்டர் பரசுராமன், Bcci NCA லெவல் பி பயிற்சியாளர் மற்றும் வேலம்மாள் knowledge park கிரிக்கெட் வழிகாட்டி திரு. சதீஷ் சதகோபன், NCA லெவல் ஏ பயிற்சி ஆளர் மற்றும் ராணிப்பேட்டை மாவட்ட DMK விளையாட்டு அணி தலைவர் பிரேம் ஆனந்த் உள்ளிட்டோர் கலந்து கொள்கின்றனர்.
இந்த நிகழ்வு தமிழ்நாட்டில் கிரிக்கெட் வளர்ச்சிக்கான முக்கிய உத்வேகமாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த போட்டியில் 32 நாக அவுட் போட்டிகள் நடைபெறும். இவற்றில் முதல் 4 அணிகள் செமிஃபைனலுக்கு செல்லும். இறுதிப்போட்டி 8-ம் மார்ச் 2025 அன்று நடைபெறும். இந்த போட்டிகளில் சிறந்த வீரர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் மற்றும் அவர்களுக்கு தொழில்முறை பயிற்சி அளிக்கப்படும்.
மேலும், சிறப்பாக செயல்பட்ட வீரர்கள் ஏலத்திற்கு உரியவர்களாக மாற்றப்படுவார்கள். இதில் 8 அணிகள் 15 வீரர்களை தேர்வு செய்து, கடைசியில் மே 2025 இல் நடைபெறும் உத்தியோகபூர்வ போட்டியில் பங்கேற்கின்றனர். இந்த TSPL நிகழ்வு, கிரிக்கெட் உலகில் ஒரு புதிய தலைமுறை தொடங்கி, விளையாட்டு மீது உள்ள பற்றை மேலும் அதிகரிக்கும் வாய்ப்பை உருவாக்குகிறது.
Read more:2 லட்சம் டெபாசிட் செய்தால் 32 ஆயிரம் வட்டி.. பெண்களுக்கான வேறலெவல் சேமிப்பு பிளான்..!!