டாஸ்மாக் விற்பனை குறித்து பொய் தகவல் போட்டதாக அமைச்சர் செந்தில் பாலாஜி அந்த தொலைக்காட்சியை வறுத்தெடுத்த சம்பவம் நடந்துள்ளது.
டாஸ்மாக்கில் தீபாவளி விற்பனை குறித்து தந்தி டி.வி. தகவல் வெளியிட்டது. அதில், ரூ708 கோடி வசூல் என தகவல் வெளியிட்டிருந்தது. இதையடுத்துஅந்த தகவல் பொய் என தெரிவித்த அமைச்சர் செந்தில் பாலாஜி தொலைக்காட்சிக்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.
தீபாவளி , பொங்கல் , ஆங்கில புத்தாண்டு போன்ற நாட்களில் வழக்கத்தை விட மது விற்பனை கூடுதலாக இருகு்கும். அவை விடுமுறை நாட்கள் எனபதல்லாமல் பல்வேறு தரப்பினரும் சொந்த ஊருக்கு சென்று கொண்டாடுவார்கள். இதனால் உறவினர்களுடன் சேர்ந்து மது அருந்திவதுண்டு. இதன்காரணமாக மது விற்பனை சூடு பிடிக்கும். எனவே விசேஷ நாட்களுக்கு முந்தைய பிந்தைய நாட்களில் விற்பனை அமோக மாக இருக்கும். வியாபாரம் குறித்து அறிய மக்களும் ஆர்வம் காட்டுவார்கள்.
இத்தனைகோடி வருமானம் என செய்தி நிறுவனங்கள் செய்தி போடுவது வழக்கம்.திரைப்படங்கள்வெளியானால் கூட வசூல் குறித்த செய்தி இடம்பெறும். தீபாவளி வசூல் , பொங்கல் வசூல் என அழைக்கப்படுகின்றது. இந்த புள்ளி விவரங்கள் வெளியாகும். மாவட்டங்கள் மது விற்பனையில் கொடி கட்டி பறக்கின்ன என்ற செய்திகள் மக்களுக்கு ஊக்கம் அளிக்கும்.
இந்த ஆண்டு டாஸ்மாக் வியாபாரம் குறித்து தந்தி டிவி செய்தி வெளியிட்டுள்ளது. இது உண்மைக்கு புறம்பான செய்தி என்று அமைச்சர் செந்தில் பாலாஜி விளக்கம் அளித்துள்ளார். இது குறித்து செய்திகள் வெளியானது. டாஸ்மாக் இலக்கு என உண்மைக்கு புறம்பான செய்தியை வெளியிட்டு அதனை சுட்டிக்காட்டிய பின்னர் தொலைக்காட்சி நீக்கியது. தீபாவளி முடிநததும் நிர்வாகத்திற்கே முழு விவரம் வந்து சேராத நிலையில் ’ விற்பனை விவரம் ’ என பொய்யான தகவல் மக்களிடம் கொண்டு சேர்ப்பதாக தெரிவித்தார் .
அரசு நிறுவனங்கள் மீது தவறான பிம்பத்தை உருவாக்கும் வகையில் உண்மை நிலையை அறியாமலும் குறைந்த பட்ச அறம்ட கூட இல்லாமல் உண்மைக்கு மாறான செய்தி பரப்புவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.