மதுரை மாவட்டத்தில் 3 நாட்கள் மதுபான கடைகளை மூட மாவட்ட ஆட்சியர் சங்கீதா உத்தரவு பிறப்பித்துள்ளார். மருதுபாண்டியர்களின் நினைவு தினம் மற்றும் முத்துராமலிங்க தேவர் குருபூஜையை முன்னிட்டு 3 நாட்கள் மதுக்கடைகளை மூட உத்தரவிடப்பட்டுள்ளது.
அதன்படி, இன்று, அக்.29 மற்றும் 30 ஆகிய தேதிகளில் மதுரையில் அனைத்து விதமான டாஸ்மாக் கடைகளையும் மூட உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும், உத்தரவுகளை மீறுவோரை கண்காணிக்க அலுவலர்கள் நியமிக்கப்பட்டு உள்ளதாகவும் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். எவ்வித அசம்பாவித சம்பவங்களும் நடைபெறக் கூடாது என்பதை கருத்தில் கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.