fbpx

டாஸ்மாக் கடையில் கொள்ளை முயற்சி…..! காவல் துறையினர் நடத்திய அதிரடி துப்பாக்கிச்சூடு என்ன நடந்தது…..!

நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே உள்ள குந்தலாடி பகுதியில் டாஸ்மாக் கடை ஒன்று செயல்பட்டு வருகிறது. அந்த கடையில் அதிகாலையில் சாம்பார் மணி உள்ளிட்ட 2 பேர் மதுபானங்களை திருடிக் கொண்டிருந்தனர் இதுகுறித்து காவல்துறையினருக்கு ரகசிய தகவல்களை கிடைத்தது. அதன் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் சாம்பார் மற்றும் மணியை பிடிக்க முயற்சி செய்தபோது கத்தியால் காவலர்களை தாக்கி விட்டு தப்பி செல்ல முயற்சி செய்துள்ளனர்.

இதனைத் தொடர்ந்து காவல்துறையினர் தற்காப்புக்காக காலில் சுட்டனர். பின்னர் சுடப்பட்ட சாம்பார்மணிக்கு தொடையில் குண்டுப்பாய்ந்து கூடலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அவர் சிகிச்சை பெற்று வருகிறார்.

அதோடு, 2 காவலர்களுக்கும் சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது. தப்பிச்சென்ற மற்றொரு கொள்ளையனை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். அதிகாலை நடைபெற்ற இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பெரும் பதற்றம் நிலவி வருகிறது.

Next Post

கூலித்தொழிலாளியின் வங்கிக் கணக்கில் ரூ.100 கோடி..!! வங்கி அதிகாரிகள் ஷாக்..!! நடந்தது என்ன..?

Fri May 26 , 2023
மேற்குவங்க மாநிலம் முர்ஷிதாபாத் பகுதியில் பாசுதேப்பூர் கிராமத்தைச் சேர்ந்தவர் முகமது நசிருல்லா மண்டல். கூலித் தொழிலாளியான இவரது வங்கிக் கணக்கில் ரூ.100 கோடி டெபாசிட் ஆகியுள்ளது. இதனால், முகமதுவின் வங்கிக் கணக்கு தற்காலிகமாக முடக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி, அவரது வீட்டு வசாலிலும் இதுகுறித்து சைபர் செல் துறையினர் அறிவிப்பை வெளியிட்டுள்ளனர். இதைபார்த்த பின்பு தான் தனது வங்கிக் கணக்கில் 100 கோடி ரூபாய் இருப்பது முகமதுக்கு தெரியவந்தது. இதையடுத்து, வங்கிக் கணக்கில் […]
கூலித்தொழிலாளியின் வங்கிக் கணக்கில் ரூ.100 கோடி..!! வங்கி அதிகாரிகள் ஷாக்..!! நடந்தது என்ன..?

You May Like