ரத்த அழுத்தம், இன்றுள்ள காலகட்டத்தில் பலருக்கு இருக்கும் கொடுமையான நோய்களில் ஒன்று. இந்த நோயினால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே தான் உள்ளது. இதில் இருந்து விடுபட வேண்டும் என நினைத்து பலர் கலர் கலரான மாத்திரைகளை சாப்பிட்டு பக்கவிளைவுகள் ஏற்படுவது தான் மிச்சம்.
இந்நிலையில், பக்கவிளைவுகள் இல்லாமல் ரத்த அழுத்தத்தில் இருந்து விடுபட, மருத்துவர் ஆஷா லெனின் சுவையான மருந்து ஒன்றை பற்றி விளக்கியுள்ளார். ஆம், குயின் ஆஃப் ஃப்ரூட்ஸ் என்று சொல்லப்படும் பலாப்பழம் தான் அந்த சுவையான மருந்து. பலாப்பழத்தில், விட்டமின் சி அதிகளவில் உள்ளது. இதனால், இதை சாப்பிடும் போது, ரத்தத்தில் உள்ள ஹோமோ சிஸ்டைன் குறைந்து ரத்த அழுத்தம் குறையும் என்று அமெரிக்கன் ஹார்ட் பவுண்டேஷனில் நடத்தப்பட்ட ஆய்வில் தெரியவந்துள்ளது.
அது மட்டும் இல்லாமல், பலாப்பழத்தில் புரதச்சத்து, மாவுச்சத்து, வைட்டமின் ஏ, வைட்டமின் பி, வைட்டமின் சி, கால்சியம், துத்தநாகம், பாஸ்பரஸ் உள்ளிட்ட பல்வேறு சத்துக்கள் நிறைந்துள்ளது. இதனால் குடல்களில் ஏற்படும் பிரச்சனைகள் குணமாவது மட்டும் இல்லாமல், குடல்களின் ஆரோக்கியமும் மேம்படுத்துகிறது. பொதுவாக, கெட்ட கொழுப்புகள் ரத்தக் குழாய்களில் அடைப்பை ஏற்படுத்தும்.
ஆனால், நாம் அடிக்கடி பலாப்பழம் சாப்பிடும் போது, ரத்த குழாய்களில் இருக்கும் அடைப்பை குணப்படுத்தும். பலாப்பழம் சாப்பிடுவதால் உடலில் கொழுப்பு குறைந்து, மாரடைப்பு, பக்கவாதம் ஏற்படாமல் நமது உடலை பாதுகாக்கும். மேலும், இதில் உள்ள வைட்டமின் சி மற்றும் ஏ நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதோடு கண்கள் மற்றும் சரும ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.
Read more: பெற்றோர்களே எச்சரிக்கை!!! இந்த தவறை செய்வதால், குழந்தைகளுக்கு கட்டாயம் புற்றுநோய் ஏற்படும்..