டாடா குழுமம் பல்வேறு தயாரிப்புகளில் சாதனை படைத்து வருகிறது. இன்னும் சொல்லப்போனால், டாடா குழுமம் தயாரிக்கும் எந்த ஒரு பொருளுமே தரமாக தான் இருக்கும் என்பது மக்களின் கருத்தாக இருக்கிறது. அதற்கேற்றார் போல, அந்த கம்பெனியின் தயாரிப்பும் உள்ளது.
அந்த வகையில், டாடா மோட்டார்ஸ் நிறுவனம் இந்திய ஆட்டோமொபைல் சந்தையில், எலக்ட்ரிக் வாகன பிரிவில் முன்னணி இடத்தில் இருந்து வருகிறது. எலக்ட்ரிக் வாகன உற்பத்தியில், ஒரு லட்சம் யூனிட்டுகளை உற்பத்தி செய்திருப்பதாக தற்போது அந்த நிர்வாகம் அறிவித்திருக்கிறது. இதில் சென்ற ஒன்பது மாதங்களில் மட்டும், 50,000 எலக்ட்ரிக் வாகனங்களை உற்பத்தி செய்து உள்ளது என்ற செய்தியும் கிடைத்துள்ளது.
தற்சமயம் இந்த டாடா மோட்டார்ஸ் நிறுவனமானது, அனைத்து விதத்திலும், எலக்ட்ரிக் வாகனங்களை விற்பனை செய்து வருகிறது. அந்த விதத்தில், ஹச் பேக் பிரிவில் டியாகோLV செடான் பிரிவில், டிகோர் LV மற்றும் எஸ்யூவி பிரிவில் எக்ஸாம் உள்ளிட்ட மாடல்கள் இடம்பெற்றிருக்கின்றன. இத்துடன், எக்ஸ்பிரஸ் டிகோர் மாடலின் வாடகை கார் விமர்சனம் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
இந்த டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் எல்லா எலக்ட்ரிக் வாகனங்களின் விலையும் 8,69000 ரூபாய் என்று ஆரம்பமாகி, அதிகபட்சமாக 19,29000 வரையில், நிர்ணயம் செய்யப்பட்டு இருக்கிறது. எல்லா விலைகளும் எக்ஸ்ஷோரூம் அடிப்படையில், குறிப்பிடப்பட்டுள்ளது.
2028 ஆம் வருடம் இந்தியாவின் எலக்ட்ரிக் வாகன சந்தையில் 10 லட்சம் யூனிட்டுகள் வரையில் இருக்கும் என்று tata மோட்டார்ஸ் நிறுவனம் நம்பிக்கை கூறியுள்ளது. இதில், 20 சதவீதம் யூனிட்டுகள் எலக்ட்ரிக் பவர்டிரெயின் கொண்டிருக்கும் என்று கூறியுள்ளது