fbpx

டாடா ஸ்டீல் செஸ்!. சாம்பியன் பட்டம் வென்றார் கார்ல்சன்!.

Tata Steel Chess: டாடா ஸ்டீல் செஸ் சாம்பியன் தொடரில் நார்வே வீரர் கார்ல்சன் பட்டம் வென்றார்.

மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் டாடா ஸ்டீல் இந்தியா சர்வதேச செஸ் தொடர் நடக்கிறது. முதலில் ரேபிட் முறையில் போட்டி நடந்தன. 7வது சுற்றில் இந்தியாவின் பிரக்ஞானந்தா, சக வீரர் நாராயணனை வென்றார். 8வது சுற்றில் இந்தியாவின் அர்ஜுன், அஜர்பெய்ஜானின் நாடிர்பெக்கை வீழ்த்தினார். 9வது, கடைசி சுற்றில் இந்திய வீரர்கள் பிரக்ஞானந்தா, அர்ஜுன் மோதினர். வெள்ளை நிற காய்களுடன் களமிறங்கினார் பிரக்ஞானந்தா. 210 வது நகர்த்தலில் முந்திய பிரக்ஞானந்தா, தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தினார். முடிவில் 51வது நகர்த்தலில் வெற்றி பெற்றார்.

நார்வேயின் கார்ல்சன், நாடிர்பெக்கை மோதிய மற்றொரு போட்டி ‘டிரா’ ஆனது. ஒன்பது சுற்று முடிவில் கார்ல்சன், 7.5 புள்ளியுடன் முதலிடம் பெற்று சாம்பியன் ஆனார். பிரக்ஞானந்தா (5.5) இரண்டாவது, அர்ஜுன் (3.5) 8வது இடம் பெற்றனர். பெண்கள் பிரிவில் ரஷ்யாவின் அலெக்சாண்ட்யா (7.5) சாம்பியன் ஆனார். இந்தியாவின் வந்திகா (5.0) 3வது இடம் பிடித்தார்.

Readmore: புரோ கபடி லீக்!. தொடக்கம் முதலே ஆதிக்கம்!. தமிழ் தலைவாஸை வீழ்த்தி அசத்தல்!. முதலிடத்தில் நீடிக்கும் ஹரியானா!.

English Summary

Magnus Carlsen, Kateryna Lagno win Tata Steel Chess India blitz titles

Kokila

Next Post

தக்காளியின் விலை 22 சதவீதத்திற்கும் மேலாக சரிந்தது...! மத்திய நுகர்வோர் விவகாரங்கள் துறை தகவல்...!

Mon Nov 18 , 2024
Tomato prices fall by more than 22 percent

You May Like