டாடாசன் குழுமத்தின் முன்னாள் தலைவர் சைரஸ் மிஸ்ட்ரி சாலை விபத்தில் உயிரிழந்தார். அவருடன் காரில் சென்ற மற்றொரு நபரும் பரிதாபமாக பலியானார்.
மும்பையில் டாடாசன் குழுமத்தின் முன்னாள் தலைவர் சைரஸ்மிஸ்ட்ரி. ,வெற்றிகரமாக இயங்கிய நிறுவனத்திற்கு மிக முக்கிய பங்கு வகித்தவர். இவருக்கு வயது 54 . மஹாராஷ்டிராவில் இருந்து மிஸ்ட்ரி உள்ளிட்ட 4 பேர் அகமதாபாத்தை நோக்கி காரில் சென்று கொண்டிருந்தனர். அப்போது பல்கர் பகுதியில் சூர்யா ஆற்றின் பாலத்தை கடந்தபேது அங்குள்ள சாலை தடுப்புச்சுவரில் கார் வேகமாக மோதியுள்ளது. இதில் காரின் முன்பக்கம் அப்பளம் போல் நொறுங்கியது.
அதிகாலை 3.15 மணி அளவில் நடைபெற்ற இந்த கார் விபத்தில் காரில் பயணித்த சைரஸ் மிஸ்டரி மற்றும் மற்றொரு நபர் உயிரிழந்தனர். மேலும் இரண்டு பேர் படுகாயம் அடைந்தனர். அங்கிருந்த தனியார் மருத்துவமனையில் அவர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த தகவல் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. பிரதமர் நரேந்திரமோடி சைரஸ் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார். ’’சைரஸ் மிஸ்டரி மறைவு அதிர்ச்சியளிக்கின்றது. அவருக்கு எனது ஆழ்ந்த இரங்கல். இந்தியாவின் பொருளாதார சக்தியான நம்பகத்தகுந்த வர்த்தகத் தலைவராக திழ்ந்தவர். அவரின் மறைவு உலக வர்த்த மற்றும் நிறுவனத்திற்கே பெரும் இழப்பு. அவரது குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கல் என தெரிவித்துள்ளார்.
மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் தனது ட்விட்டர் பக்கத்தில் ’’சைரஸ் மிஸ்ட்ரியின் இழப்பு திடீரென பிரிந்தது அதிர்ச்சியளிக்கின்றது. இந்திய தொழில்துறைக்கு இது மிகப்பெரிய இழப்பு . பொருளாதாரத்தில் இரவது பங்களிப்பால் நட்சத்திரம் போல ஜொலித்தார். அவரது நண்பர்கள் , குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கல் . என தெரிவித்துள்ளார்.