மருமகளை டிவி பார்க்கவும், பக்கத்து வீட்டில் வசிப்பவர்களை சந்திக்கவும், கோவிலுக்கு தனியாக செல்லவும் அனுமதிக்காதது கொடுமை அல்ல என்று பெண்ணின் தற்கொலை வழக்கில் மும்பை உயர் நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.
மகாராஷ்டிர மாநிலம், வாரங்கானையைச் சேர்ந்த ஒரு தம்பதிக்கு 2002-ஆம் ஆண்டு டிசம்பரில் திருமணம் நடந்த நிலையில், பெற்றோர் வீட்டுக்கு திரும்பிய மகள், 2 மாதங்கள் கழித்து 2003-ஆம் ஆண்டு மே ஒன்றாம் தேதி தற்கொலை செய்து கொண்டார். தொடக்கம் முதலே அந்த பெண்ணுக்கும், கணவர் மற்றும் அவருடைய குடும்பத்தினருக்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த அந்த பெண் தாய் வீட்டுக்கு சென்ற பின் அங்கு தற்கொலையும் செய்து கொண்டார்.
கணவன் வீட்டில் செய்த கொடுமைகள் தான் எங்கள் மகளின் தற்கொலைக்கு காரணம் என்று பெண் வீட்டார் சார்பில் போலீசில் புகாரளிக்கப்பட்டது. பெற்றோர் அளித்த புகாரில், டிவி பார்க்க அனுமதிக்கவில்லை, பக்கத்து வீட்டில் உள்ளவர்களுடன் பேச அனுமதிக்கவில்லை, கோவிலுக்கு தனியாக சென்று வரவும் அனுமதிக்க வில்லை.. நள்ளிரவில் மாமியார் தண்ணீர் கொண்டு வர சொல்லி தூங்க விடாமல் செய்கிறார். இதுபோன்ற கொடுமைகளால் தான் மனம் உடைந்து எங்கள் மகள் தற்கொலை செய்து கொண்டார் என தனது புகாரில் தெரிவித்தார்.
இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். மேலும் இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் கணவர் மற்றும் அவரது குடும்பத்தை குற்றவாளிகள் என்று தீர்ப்பு வழங்கியது. இந்த தீர்ப்பை எதிர்த்து தற்கொலை செய்த பெண்ணின் கணவர் மற்றும் குடும்பத்தினர் அலகாபாத்தில் உள்ள மும்பைஉயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
இந்த வழக்கை நீதிபதி அபய் வாக்வாஸ் விசாரித்தார். அவர் தெரிவித்த தனது தீர்ப்பில், அண்டை வீட்டாருடன் பழகுவதை தடுப்பதையும், டிவி பார்க்க அனுமதிக்காதது, நள்ளிரவில் தண்ணீர் கேட்பது உள்ளிட்டவற்றை கொடுமை என்று கூறிவிட முடியாது. கொடுமை என்றால் மனுதாரரின் மகள் மீது தாக்குதல் அல்லது மனரீதியான துன்புறுத்தல் நடந்து இருக்க வேண்டும் என்று கூறி மேல்முறையீடு செய்தவர்களின் தண்டனையை உயர் நீதிமன்றம் ரத்து செய்தது.
Read more ; சாதத்தை ஒரு போதும் சூடுபடுத்தி சாப்பிடக் கூடாது!! மீறினால் வரும் ஆபத்து..