டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் இந்தியாவின் மிகப்பெரிய ஐடி சேவை நிறுவனமாக இருப்பது மட்டும் அல்லாமல் கடந்த 3 வருடத்தில் சராசரியாக ஒவ்வொரு வருடமும் 50000 பேருக்கு நேரடியாக வேலைவாய்ப்பு கொடுத்துள்ள மாபெரும் நிறுவனமாகும். டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் நிர்வாகம் தனது உயர் அதிகாரிகளில் சிலர் பல ஆயிரம் ஊழியர்களை லஞ்சம் வாங்கி கொண்டு பணியில் சேர்த்துள்ளது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. அதிலும் குறிப்பாக ஸ்டாஃபிங் நிறுவனத்திடம் இருந்து நேரடியாக பல கோடி லஞ்சம் வாங்கிகொண்டு வேலைவாய்ப்பை கொடுத்துள்ளனர். இதை டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் எப்படி செய்தார்கள் என்பது குறித்து முழுமையாக தகவல் வெளிவரவில்லை என லைவ்மின்ட் தெரிவித்துள்ளது.
இந்த மாபெரும் மோசடியை பற்றி பெயர் தெரியாத ஒருவரால் (whistleblower) நேரடியாக டிசிஎஸ் தலைமை நிர்வாக அதிகாரி மற்றும் தலைமை செயல் அதிகாரியிடம் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இந்த புகாரில் டிசிஎஸ் நிறுவனத்தின் ரிசோர்ஸ் மேனேஜ்மென்ட் குரூப்-ன் (RMG) குளோபல் தலைவர் ஈ.எஸ்.சக்ரவர்த்தி பல வருடங்களாக staffing firms-களிடம் இருந்து அதிகப்படியான கமிஷன் பெற்று வருகிறார் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. whistleblower-யிடம் இருந்து வந்த புகாரை தொடர்ந்து டிசிஎஸ் உயர்மட்ட நிர்வாகம் 3 முக்கிய அதிகாரிகள் அடங்கிய குழு நியமிக்கப்பட்டு ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டது. இந்த 3 பேரில் டிசிஎஸ் தலைமை தகவல் பாதுகாப்பு அதிகாரியான அஜித் மேனன் இருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த 3 பேர் கொண்ட குழுவின் விசாரணை முடிவுகள் வெளியானது..
இதை தொடர்ந்து டிசிஎஸ் நிர்வாகம் recruitment பிரிவின் தலைவரை விடுமுறைக்கு அனுப்பியது, Resource Management Group-ல் 4 முக்கிய நிர்வாக அதிகாரிகளை டிஸ்மிஸ் செய்யப்பட்டு உள்ளனர், 3 staffing நிறுவனங்களை டிசிஎஸ் பிளாக்லிஸ்ட் செய்துள்ளது. தற்போது டிஸ்மிஸ் செய்யப்பட்ட அதிகாரிகள் செய்த முறைகேடுகளின் அளவை நிறுவனம் இன்னும் கண்டறியவில்லை என்றாலும், மேலே குறிப்பிடப்பட்ட இரண்டு நிர்வாகிகளில் ஒருவர் கமிஷன் மூலம் குறைந்தது 100 கோடி சம்பாதித்திருக்கலாம் என்று லைவ்மின்ட் தெரிவிக்கிறது. டிசிஎஸ் நிறுவனத்தின் ரிசோர்ஸ் மேனேஜ்மென்ட் குரூப்-ன் குளோபல் தலைவர் ஈ.எஸ்.சக்ரவர்த்தி இந்நிறுவனத்தில் சுமார் 1997 ஆம் ஆண்டில் இணைந்து சிஓஓ ஆன கணபதி சுப்பிரமணியம் அவர்களின் கீழ் பணியாற்றி வருகிறார். சக்ரவர்த்தி அலுவலகத்திற்கு வர தடை விதிக்கப்பட்டு உள்ள வேலையில் இவருடைய ஈமெயில் ஐடி இன்னும் முடங்கவில்லை என்பது முக்கியமான விஷயமாக உள்ளது. இதேவேளையில் RMG பிரிவில் முக்கிய அதிகாரியான அருண் ஜிகே பணிநீக்கம் செய்யப்பட்டு உள்ளதாக லைவ்மின்ட் தெரிவித்துள்ளது.