தேநீர் விருந்து தொடர்பாக அனைத்து மாநிலங்களுக்கும் மத்திய உள்துறை அமைச்சகம் கடிதம் ஒன்றை எழுதியுள்ளது.
குடியரசு தினம் மற்றும் சுதந்திர தினத்தையொட்டி ஜனாதிபதி மாளிகை மற்றும் கவர்னர் மாளிகையில் தேநீர் விருந்து நடத்தப்படுவது வழக்கம். இந்த தேநீர் விருந்து தொடர்பாக அனைத்து மாநிலங்களுக்கும் மத்திய உள்துறை அமைச்சகம் கடிதம் ஒன்றை எழுதியுள்ளது. அந்த கடிதத்தில், “தேநீர் விருந்தில், மரபுப்படி விருந்தினர்களை அழைப்பதுடன், பல்வேறு துறைகளில் சாதித்தவர்களையும் அழைக்க வேண்டும்.
மாற்றுத்திறனாளி சாதனையாளர்கள், முன்கள சுகாதாரப் பணியாளர்கள், வீரமரணம் அடைந்த வீரர்களின் குடும்பத்தினர், பத்ம விருது பெற்றவர்கள், கொரோனா காலத்தில் சமூகத்துக்கு வியத்தகு சாதனை செய்தவர்கள், சுற்றுச்சூழல் போராளிகள், ‘மன் கி பாத்’ உரையில் பிரதமரால் குறிப்பிடப்பட்டவர்கள், ஊராட்சி பெண் தலைவர்கள் ஆகியோரையும் அழைக்க வேண்டும். ஒவ்வொரு ஆண்டும் இவர்களுக்கு 25 முதல் 50 இடங்கள் ஒதுக்கீடு செய்ய வேண்டும்” என்று அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.