வட இந்தியாவில் பள்ளி ஒன்றில் ஆசிரியரிடம் அடி வாங்கும் மாணவர் வீடியோ வைரலாகி வருகின்றது.
ஆசிரியர் தினம் நாடு முழுவதும் கொண்டாடப்பட்டது. இதை ஒட்டி வட இந்தியாவில் உள்ள பள்ளி ஒன்றிலும் கொண்டாடப்பட்டது. ஆசிரியரை நாற்காலியில் அமர வைத்து மாணவர்கள் மரியாதை செலுத்தி பரிசுகள் வழங்கி கொண்டாடினர். அப்போது மாணவர் ஒருவர் தான் வைத்திருந்த ஸ்பிரேவை ஆசிரியரின் முகத்துக்கு நேராக கொண்டு சென்று அடித்தார். இதனால் , கடுப்பான ஆசிரியர் அவனை குனியவைத்து கும்மு கும்மென்று கும்மினார் . இந்த வீடியோவை மருத்துவர் ஒருவர் தனது டுவிட்டர் பக்கத்தில் ’ஹாப்பி டீச்சர்ஸ் டே ’’ என வெளியிட்டுள்ளார். மாணவன் அடிவாங்கியதும் அங்கிருந்த சிறுமிகள் குலுங்கி குலுங்கி சிரித்தனர்.