fbpx

TET: வரும் 25-ம் தேதி தான் கடைசி நாள்…! ஆசிரியர் தேர்வு வாரியம் முக்கிய அறிவிப்பு…! மிஸ் பண்ணிடாதீங்க..! ‌

ஆசிரியர் தகுதித் தேர்வு தாள் 2 தற்காலிக விடைக் குறிப்பு வெளியிடப்பட்டுள்ளது ‌.

இது தொடர்பாக ஆசிரியர் தேர்வு வாரியத்தின் தலைவர் நந்தகுமார் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், தமிழ்நாடு ஆசிரியர் தகுதித் தேர்வு 2021இல் பட்டதாரி ஆசிரியர் பணிக்கான தகுதித்தேர்விற்கு உரிய தாள் 2க்கான தேர்வுகள் கம்ப்யூட்டர் மூலம் பிப்ரவரி 3-ம் தேதி முதல் 15-ம் தேதி வரையிலும் நடத்தப்பட்டது. தற்போது தேர்வுக்கான கேள்விகளுக்கு உரியத் தற்காலிக உத்தேச வினைக்குறிப்புகள் ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளமான www.tn.nic.in வெளியிடப்பட்டுள்ளன. தேர்வர்கள் தாங்கள் தேர்வு எழுதிய தேதியில் எந்த அமர்வில் தேர்வு எழுதியவர்களோ அந்த அமர்வுக்கு உரிய Master Quotion Paper TRB இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

தேர்வர்கள் வெளியிடப்பட்டுள்ள தற்காலிக விடைக்குறிப்பிற்கு இணையவழியில் ஆட்சேபனை தெரிவிக்கும் போது உரிய வழிமுறைகளைத் தவறாமல் பின்பற்றி அதற்குரிய சான்றாவணங்களை இணைக்க வேண்டும். சான்றாவணங்கள் இணைக்கப்படாத முறையீடுகள் பரிசீலனைக்கு ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது.

மேலும், ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ள தற்காலிக உத்தேச விடைக்குறிப்பின் மீது தேர்வர்கள் ஆட்சேபனை தெரிவிக்க விரும்புவோர் இன்று முதல் 25-ம் தேதி மாலை 5.30 மணி வரையில் மட்டும் ஆதாரங்களுடன் பதிவு செய்திடல் வேண்டும் அங்கீகரிக்கப்பட்ட பாட புத்தகங்கள் ஆதாரம் மட்டுமே அளிக்க வேண்டும்.

Vignesh

Next Post

OPS Vs EPS... யாருக்கு வெற்றி..? பொதுக்குழு வழக்கில் இன்று தீர்ப்பு.. அதிமுகவில் உச்சக்கட்ட பரபரப்பு..

Thu Feb 23 , 2023
அதிமுக பொதுக்குழு தொடர்பான வழக்கில் உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்குகிறது.. அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரம் கடந்த ஆண்டு உச்சத்தை எட்டியது.. ஓபிஎஸ் – இபிஎஸ் இடையே நேரடி மோதல் ஏற்பட்ட நிலையில், கடந்த ஆண்டு ஜூலை 11-ம் தேதி நடைபெற்ற பொதுக்குழு கூட்டத்தில் எடாப்பாடி பழனிசாமி இடைக்கால பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டார்.. ஓபிஎஸ் உள்ளிட்டோரை இபிஎஸ் அதிமுகவில் இருந்து நீக்கினார்.. இதே போல் இபிஎஸ் மற்றும் அவரது ஆதரவாளர்களை […]

You May Like