fbpx

மகிழ்ச்சி செய்தி…! ஆசிரியர் தேர்வு வாரிய தேர்வுகள் 2024 ஜூன் 31-க்குள் முடிக்க வேண்டும்…! முழு விவரம் இதோ…

ஆசிரியர்களிடையே பொது மாறுதல்கள் வழங்குவதற்கு பின்பற்றப்பட வேண்டிய கொள்கை நெறிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளது .

இது குறித்து பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ள அரசாணைகள்; பள்ளிக்கல்வித்துறையின் கீழ் இயங்கும் ஊராட்சி ஒன்றியம், நகராட்சி, மாநகராட்சி, அரசு தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகள் மற்றும் அரசு நகராட்சி, மாநகராட்சி உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் பணியாற்றும் அனைத்து வகை ஆசிரியர்களிடையே பொது மாறுதல்கள் வழங்குவதற்கு பின்பற்றப்பட வேண்டிய கொள்கை நெறிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளது .

மேலும் பள்ளிக் கல்வி இயக்ககத்தின் நிர்வாக கட்டுப்பாட்டில் செயல்பட்டு வரும் அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் உள்ள அனைத்துப் பாட பட்டதாரி ஆசிரியர் காலிப் பணியிடங்கள் நிரப்பிடும் போது பின்பற்றப்பட வேண்டிய வழிமுறைகள் வகுத்து அறிவுறுத்தல் வழங்கி ஆணைகள் வெளியிடப்பட்டுள்ளது. அரசு பள்ளிகளில் உள்ள அனைத்துப் பாட பட்டதாரி ஆசிரியர் காலிப் பணியிடங்களில் ஆசிரியர் தேர்வு வாரியத்தின் மூலம் தேர்வு செய்யப்படும் பணிநாடுநர்களில் இருந்து நேரடி பணி நியமனம் செய்யும்போது, பின்பற்றப்பட வேண்டிய கால அட்டவணையை கீழ்க்கண்டவாறு வெளியிட்டு அரசு ஆணையிடுகிறது.

அதன்படி, பட்டதாரி ஆசிரியர் உபரி பணியிடங்களை வருகிற மே 1-க்குள் கணக்கீடு செய்ய வேண்டும். அவர்களை தேவையுள்ள பள்ளிகளுக்கு பணிநிரவல் செய்வது மே 31-க்குள் நடக்க வேண்டும், அனைத்து வகை ஆசிரியர்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வு ஜூன் 30-க்குள் நடத்தி முடிக்க வேண்டும், பட்டதாரி ஆசிரியர் காலி பணியிட மதிப்பீட்டை ஜூலை 1க்குள் முடிக்க வேண்டும். காலிப் பணியிடங்களை நிரப்பிட கோரும் கருத்துருக்கள் இருந்தால் அதனை அரசுக்கு ஜூலை 15-க்குள் அனுப்ப வேண்டும்.

அதன் மீது அரசாணை செப்டம்பர் 30-க்குள் வெளியிடப்பட வேண்டும், நேரடி பணி நியமனம் செய்யப்படும் உத்தேச பணியிடங்களின் எண்ணிக்கை குறித்து ஆசிரியர் தேர்வு வாரிய குழு மற்றும் நிதித்துறை உறுப்பினரின் ஒப்புதலை உறுதி செய்த பின் அறிவிப்பு வெளியிடப்பட வேண்டும். ஆசிரியர் தேர்வு வாரியத்தால் தேர்வுகள் 2024 ஜூன் 31-க்குள் முடிக்க வேண்டும். முடிவுகள் ஏப்ரல் 30-க்குள் வெளியிடப்பட வேண்டும். சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் இறுதி பட்டியலை மே 1 முதல் 31-க்குள் வழங்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Vignesh

Next Post

டெல்லியில் இன்று கூடுகிறது அனைத்து கட்சி கூட்டம்!… நாடாளுமன்ற கூட்டத்தொடர் தொடங்குவதையொட்டி அழைப்பு!

Tue Jan 30 , 2024
நாடாளுமன்ற கூட்டத்தொடர் தொடங்குவதையொட்டி இன்று அனைத்து கட்சி கூட்டத்துக்கு மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷி அழைப்பு விடுத்துள்ளார். இடைக்கால பட்ஜெட் கூட்டத்தொடர் நாளை தொடங்கவுள்ள நிலையில் அனைத்துக் கட்சி கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இன்று காலை 11:30 மணிக்கு டெல்லியில் உள்ள நாடாளுமன்ற நூலகக் கட்டிடத்தில் அனைத்து கட்சி கூட்டம் நடைபெறவுள்ளது. மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 2024-2025 நிதி ஆண்டுக்கான இடைக்கால பட்ஜெட்டை பிப்.1-ம் தேதி தாக்கல் செய்கிறார். […]

You May Like