fbpx

ஆசிரியர் பணியிடங்கள்..!! வெளியானது தேர்வு முடிவுகள்..!! எப்படி தெரிந்து கொள்வது..?

தமிழ்நாட்டில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்கள் அனைத்தும் டெட் தேர்வு மூலம் நிரப்பப்படுகிறது. கடந்தாண்டு இதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டு முதற்கட்ட தேர்வு அக்டோபர் மாதம் நடைபெற்று முடிந்தது. அதனைத் தொடர்ந்து பட்டதாரி ஆசிரியர்களுக்கான இரண்டாம் கட்ட தேர்வு கடந்த பிப்ரவரி மாதம் நடைபெற்றது. இந்நிலையில், பட்டதாரி ஆசிரியர் பணிகளுக்கான டெட் 2-ஆம் தாள் தேர்வு முடிவுகள் வெளியானது.

கடந்த பிப்ரவரி 3ஆம் தேதி முதல் பிப்ரவரி 12ஆம் தேதி வரை கணினி வழியில் இந்த தேர்வு நடைபெற்றது. அதன் முடிவுகள் நேற்று வெளியாகியுள்ளது. தேர்வு முடிவினை www.trb.tn.gov.in என்ற இணையதளம் மூலமாக தேர்வர்கள் அறிந்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 6 முதல் 8ஆம் வகுப்பு வரை வகுப்புகள் எடுக்க இந்த தேர்வில் தேர்ச்சி பெறுபவர்கள் தகுதி உடையவர்கள் ஆவர்.

Chella

Next Post

மின்சார வாகன ஊக்குவிப்பு திட்டத்தின் கீழ் 7,432 புதிய சார்ஜிங் நிலையம்...! மத்திய அரசு அறிவிப்பு...!

Wed Mar 29 , 2023
மின்சார வாகனங்கள் ஊக்குவிப்பு திட்டத்தின் இரண்டாவது கட்டத்தின் கீழ் 7432 பொது மின்னேற்ற நிலையங்களை அமைக்க மத்திய அரசு ரூ.800 கோடி ஒதுக்கியுள்ளதாக மத்திய கனரக தொழில்துறை அமைச்சர் மகேந்திர நாத் பாண்டே தெரிவித்துள்ளார். பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களான இந்தியன் ஆயில், பாரத் பெட்ரோலியம், இந்தூஸ்தான் பெட்ரோலியம் ஆகிய நிறுவனங்கள் மூலம் இந்த சார்ஜிங் நிலையங்கள் அமைக்கப்பட உள்ளன. இதில் இந்தியன் ஆயில் நிறுவனத்தின் மூலம் 3,438 சார்ஜிங் நிலையங்களும், […]
அதிர்ச்சி..! தமிழக போக்குவரத்து துறையில் சேவை கட்டணங்கள் பல மடங்கு உயர்வு..!

You May Like