பள்ளிக் கல்வித் துறையில் அலகுவிட்டு அலகு மாறுதல் கலந்தாய்வுக்கு ஆசிரியர்கள் மே 17-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.
பள்ளிக்கல்வித்துறையின் கீழ் இயங்கும் ஊராட்சி ஒன்றியம், நகராட்சி, மாநகராட்சி, அரசு தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகள் மற்றும் அரசு நகராட்சி, மாநகராட்சி உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் பணியாற்றும் அனைத்து வகை ஆசிரியர்களிடையே பொது மாறுதல் விண்ணப்பம் ஆண்டு தோறும் பெறப்பட்டு வருகிறது. அதன் படி, நடப்பு ஆண்டிற்கான பொது மாறுதலுக்கு மே 17ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து பள்ளிக் கல்வி இயக்குநர் அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு அனுப்பிய சுற்றறிக்கையில்; அரசு பள்ளிகளில் பணிபுரியும் அனைத்து வகை ஆசிரியர்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வு, சமீபத்திலும் நடத்தி முடிக்கப்பட்டன. இதைத் தொடர்ந்து இதர துறைகளைச் சேர்ந்த ஆசிரியர்கள், பள்ளிக் கல்வி துறைக்கு மாறுவதற்கான அலகு விட்டு அலகு மாறுதல் கலந்தாய்வை EMIS இணையதளத்தில் மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது. விருப்பமுள்ள ஆசிரியர்கள் தங்கள் விண்ணப்பங்களை மே 13-ம் தேதி 17-ம் தேதி வரை பள்ளி தலைமை ஆசிரியர்கள் வாயிலாக சமர்ப்பிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.