உலகளவில் மிகவும் பிரபலமான விளையாட்டு லீக்குகளில் ஒன்றாக ஐபிஎல் உள்ளது. பிசிசிஐ துணைத் தலைவர் லலித் மோடி, ஐபிஎல் குறித்த ஆலோசனையை முன்னெடுத்த நிலையில், 2007ஆம் ஆண்டு செப்.13ஆம் தேதி “இந்தியன் பிரீமியர் லீக்” தொடங்குவதாக பிசிசிஐ அறிவித்தது.
இதையடுத்து, ஜனவரி 24, 2008ஆம் தேதி முதல் ஐபிஎல் ஏலம் நடந்தது. அப்போது, ரசிகர்களுக்கு ஐபிஎல் பற்றிய பெரிய ஆர்வம் கிடையாது. ஒவ்வொரு அணியும் அந்த ஊர் ரசிகர்களை கவரும் வகையில், வீரர்களை தேர்வு செய்து விளையாடியது. பின்னர், இந்த விளையாட்டுக்கு தனி ரசிகர்கள் கூட்டமே சேர்ந்தது.
ஐபிஎல் முன்னணி வீரர்களும், இளம் வீரர்களும் இணைந்து விளையாடும் தொடரில் அதிக முறை சாம்பியன் பட்டம் வென்ற அணி என்ற பெருமையுடன் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை அணிகள் உள்ளன. ஐபிஎல்லில் சென்னை – மும்பை அணி என்றால் தனி உற்சாகம் தான். தோனிக்காகவே சிஎஸ்கே அணிக்கு கோடிக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர்.
ஐபிஎல் தொடரில் கோப்பையை வென்ற அணிகள் :
➥ சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இதுவரை 5 முறை சாம்பியன் பட்டம் வென்றுள்ளது. (2010, 2011, 2018, 2021 மற்றும் 2023)
➥ மும்பை அணியும் இதுவரை 5 முறை சாம்பியன் பட்டம் வென்றுள்ளது. (2013, 2015, 2017, 2019 மற்றும் 2020)
➥ கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி இதுவரை 3 முறை கோப்பையை வென்றுள்ளன. (2012, 2014 மற்றும் 2024)
➥ சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணி கடுமையாக போராடி 2016ஆம் ஆண்டில் முதல் கோப்பையை தட்டிச் சென்றன.
➥ குஜராத் டைட்டன்ஸ் 2022ஆம் ஆண்டில் முதன் முதலாக அறிமுகமான உடன் தங்கள் வெற்றி கோப்பையை பெற்றார்கள். தற்போதும், இந்த அணி பலமாக இருந்து வருகிறது.
➥ ராஜஸ்தான் ராயல் அணி ஐபிஎல் தொடங்கியது முதலே பலமான அணியாக இருந்து வருகிறார். ஆனால், இதுவரை ஒருமுறை கூட கோப்பையை வென்றதில்லை.
➥ ராயல் சேலஞ்சர்ஸ் அணியும் இதுவரை எந்த ஐபிஎல் தொடரையும் வென்றதில்லை.
Read More : ’கணவருக்கு இணையாக சம்பாதிக்கும் மனைவிக்கு ஜீவனாம்சம் கிடையாது’..!! உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு..!!