fbpx

வெங்காயம் உரிக்காமலேயே கண்ணீர் வருதே..!! ஒரு கிலோ எவ்வளவு தெரியுமா..? அதிர்ச்சி மேல் அதிர்ச்சி..!!

ஒருபக்கம் தக்காளி விலை தாறுமாறாக உயர்ந்து வரும் நிலையில், விலையைக் கேட்டாலே கண்ணீர் வரும் அளவுக்கு சின்ன வெங்காயத்தின் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது.

கடந்த வாரம் தக்காளி விலை திடீரென அதிகரிக்கத் தொடங்கியது. இதையடுத்து, ஒரு கிலோ தக்காளி ரூ.100-ஐ எட்டியது. மேலும், தக்காளி விலை உயர்வை கட்டுப்படுத்தும் விதமாக தமிழ்நாடு அரசின் பண்ணை பசுமை கடைகளில் கொள்முதல் விலைக்கே தக்காளி விற்பனை செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், ஏறுமுகமாக இருந்து வந்த தக்காளியின் விலை நேற்று சற்று குறைந்தது. இதையடுத்து, கோயம்பேடு மார்க்கெட்டில் உள்ள மொத்த விற்பனை கடைகளில் ஒரு கிலோ தக்காளி ரூ.95-க்கும், சில்லறை விற்பனை கடைகளில் ஒரு கிலோ தக்காளி ரூ.120-க்கும் விற்பனை செய்யப்பட்டது.

இந்நிலையில், இன்று மீண்டும் தக்காளியின் விலை அதிகரித்துள்ளது. மொத்த விற்பனை கடைகளில் ஒரு கிலோ தக்காளி ரூ.100-க்கும், மார்க்கெட்டில் உள்ள சில்லறை விற்பனை கடைகளில் ஒரு கிலோ தக்காளி ரூ130-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் வெளி மார்க்கெட்டுகளில் 1 கிலோ தக்காளி ரூ.140 வரை விற்கப்படுகிறது. சாம்பார் வெங்காயம் என்று அழைக்கக்கூடிய சின்ன வெங்காயம் கடந்த வாரம் கிலோ ரூ.60-க்கும் விற்பனை செய்யப்பட்டது. ஆனால், தற்போது விலை கிடுகிடுவென உயர்ந்து சின்ன வெங்காயம் கிலோ ரூ.120-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

தற்போது தமிழ்நாட்டில் விளையும் நாட்டு வெங்காயத்தின் வரத்து வெகுவாக குறைந்துள்ளது. இதனால் ஆந்திரா, தெலங்கானா மாநிலங்களில் இருந்து சின்ன வெங்காயம் இறக்குமதி செய்யப்படுகிறது. அங்கும் போதிய அளவில் விளைச்சல் இல்லாத காரணத்தால், ஒட்டுமொத்தமாகவே வரத்து வெகுவாக குறைந்துள்ளது. இதனால், மொத்த மார்க்கெட்டில் ஒரு கிலோ சின்ன வெங்காயம் தரத்தை பொறுத்து ரூ.100 முதல் ரூ.120 வரை விற்பனையாகிறது.

தக்காளி போன்று சின்ன வெங்காயமும் சமையலுக்கு அத்தியாவசியமானது. இந்த வெங்காயம் இன்றி எந்த உணவும் தயாரிக்க முடியாது. இந்நிலையில், சின்ன வெங்காயத்தின் வரத்து குறைவால் விலை வெகுவாக உயர்ந்துள்ளது. தக்காளி விலை உயர்வின் அதிர்ச்சியே அகலாத நிலையில் சின்ன வெங்காயம் விலை உயர்வால் மேலும் அதிர்ச்சிக்கு உள்ளாகி உள்ளனர். தொடர்ந்து காய்கறிகளின் விலை உயர்ந்து வருவதால் இல்லத்தரசிகள், பொதுமக்கள், வியாபாரிகள், ஹோட்டல் உரிமையாளர்கள் என பல்வேறு தரப்பினரும் கவலை அடைந்துள்ளனர்.

Chella

Next Post

கல்லூரி மாணவர்களுக்கு சூப்பர் குட் நியூஸ்..!! இன்று முதல் ஆரம்பம்..!! மிஸ் பண்ணிடாதீங்க..!! உயர்கல்வித்துறை அறிவிப்பு..!!

Tue Jul 4 , 2023
தமிழ்நாட்டில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவர்களுக்கு உயர்க்கல்வித்துறை முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. தமிழ்நாட்டில் 2022-23ஆம் ஆண்டுக்கான 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு நடந்து முடிந்து, கடந்த மே 8ஆம் தேதி முடிவுகளும் வெளியாகின. இதையடுத்து, உயர்கல்விகளில் சேர மாணவர்கள் விண்ணப்பிக்க ஆரம்பித்தனர். தமிழ்நாடு முழுவதும் செயல்பட்டு வரும் 164 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் உள்ள இளநிலை படிப்பிற்கான மாணவர் சேர்க்கையும் ஆரம்பமானது. அதன்படி, […]

You May Like