பஞ்சாப் மாநிலம் முக்த்சார் மாவட்டத்தில் பகர்சார் என்ற கிராமம் இருக்கிறது. இந்த கிராமத்தில் வசித்து வருபவர் குல்விந்தர் சிங்(19) இவருடைய தந்தை 5️ வருடங்களுக்கு முன் ஒரு சாலை விபத்தில் உயிரிழந்தார்.
ஆகவே குல்விந்தர் தற்சமயம் தன்னுடைய தாய் விர்பால் மற்றும் 2 தங்கைகளுடன் வசித்து வந்ததாக தெரிகிறது. குல்விந்தரின் மூத்த தங்கையான அஞ்சு(17) என்பவர் ஒரு நபரை காதலித்து வந்ததாக சொல்லப்படுகிறது. இந்த நிலையில்தான், அஞ்சுவின் காதல் விவகாரம் அவருடைய அண்ணன் குல்விந்தருக்கு தெரியவந்துள்ளது.
இதனால் அதிர்ச்சியில் உறைந்த அவர், தன்னுடைய தங்கை அஞ்சுவை கண்டித்துள்ளார். ஆனாலும் அதனை பெரிதாக எடுத்துக் கொள்ளாமல் தன்னுடைய காதலை தொடர்ந்திருக்கிறார். அஞ்சு இந்த நிலையில் தான் நேற்று காலை அஞ்சுவின் தாய் விர்பால் வயல் வேலைக்காக வீட்டை விட்டு வெளியே சென்று இருக்கிறார்.
விர்பாலின் இளைய மகளான நிஷு பக்கத்து வீட்டில் இருந்த சூழ்நிலையில் அஞ்சுவும், குல்விந்தர் சிங்கும் மட்டும் வீட்டில் இருந்ததாக தெரிகிறது. அந்த சமயத்தில் அஞ்சுவின் காதல் குறித்து குல்விந்தர் அவருடன் தகராறு செய்ததாக தெரிகிறது.
இது குறித்த இருவருக்கும் ஏற்பட்ட வாய் தகராறு பின்னர் பெரிய சண்டையாக மாறிய நிலையில், அஞ்சுவின் பேச்சை அண்ணன் குல்விந்தர் கேட்கவில்லை என்று கூறப்படுகிறது. ஒரு கட்டத்தில் ஆத்திரம் கொண்ட அவர் தன்னுடைய தங்கையை வீட்டில் இருந்த ஒரு கூறிய ஆயுதத்தை எடுத்து வந்து கொடூரமான முறையில் தாக்கி அவரை கொலை செய்திருக்கிறார்.
இது பற்றி தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறை துணை கண்காணிப்பாளர் ஜஸ்பிர் சிங், அஞ்சுவின் உடலை கைப்பற்றி உடனடியாக பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்.
பின்னர் அஞ்சுவை கொலை செய்த அவருடைய அண்ணன் குல்விந்தர் சிங்கிடம் நடத்தப்பட்ட விசாரணையில் சகோதரியின் நடத்தையில் சந்தேகம் உண்டானதால், ஆத்திரத்தில் அவரை கொலை செய்ததாக குல்விந்தர் தன்னுடைய முதல்கட்ட வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளார்.