தெலுங்கானா மாநிலத்திற்கான சட்டமன்றத் தேர்தல் விரைவில் நடைபெற உள்ள நிலையில் அனைத்து கட்சிகளும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்தால் மாதம் ரூ.2,500, பெண்களுக்கு வழங்கப்படும் என்றும், ரூ.500க்கு காஸ் சிலிண்டர், அனைத்து வீடுகளுக்கும் 200 யூனிட் இலவச மின்சாரம் உள்ளிட்ட 6 தேர்வு வாக்குறுதிகளை காங்கிரஸ் அறிவித்துள்ளது.
மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி ஆட்சி அமைத்தவுடன் 6 தேர்தல் வாக்குறுதிகள் நிறைவேற்றப்படும் என்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, காங்கிரஸ் தலைவர்கள் சோனியா காந்தி, ராகுல் காந்தி ஆகியோர் உறுதி அளித்தனர். தெலங்கானாவில் காங்கிரஸ் ஆட்சி அமைப்பது குறித்து, முதல் அமைச்சரவை கூட்டத்தில் இந்த வாக்குறுதிகள் நிறைவேற்றப்படும் என்று ராகுல் காந்தி உறுதிபடத் தெரிவித்தார்.
காங்கிரஸ் கட்சி சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய கட்சியின் முன்னாள் தலைவர் சோனியா காந்தி பெண்களுக்கு மாதந்தோறும் ரூ.2,500 நிதியுதவி, ரூ.500க்கு காஸ் சிலிண்டர், மாநிலம் முழுவதும் டிஎஸ்ஆர்டிசி பேருந்துகளில் பெண்களுக்கு இலவசப் பயணம் என கட்சி உறுதியளித்த வாக்குறுதிகள் நிறைவேற்றப்படும் என்றார்.