fbpx

மையோனைஸ்க்கு ஓராண்டிற்கு தடை..!! – தெலுங்கானா அரசு அதிரடி உத்தரவு.. என்ன காரணம் தெரியுமா?

இவ்வளவு ஆபத்தா..? மயோனைஸ் விற்பனைக்கு அதிரடி தடை..!! வெளியான முக்கிய அறிவிப்பு..!!

பிரெஞ்சு உணவு வகையான மையோனைஸ் பிரதானமாக சாண்ட்விச், ஷவர்மா, பர்கர் உள்ளிட்ட உணவுப் பொருட்களில் பயன்படுத்தப்படுகிறது. முட்டையின் வெள்ளை கருவுடன் எண்ணெய் சேர்த்து உருவாக்கப்படும் இது பாட்டில்களிலும், பாக்கெட்டுகளிலும் அடைத்து விற்பனை செய்யப்படுகிறது. இது தற்போது சைவப் பிரியர்களுக்காக முட்டை கலக்காமலும் செய்யப்படுகிறது.

இந்நிலையில் தெலுங்கானா அரசு ஒரு வருடத்திற்கு பச்சை முட்டையில் இருந்து தயாரிக்கப்படும் மயோனைஸ் உற்பத்தி மற்றும் விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. பொதுமக்களிடம் இருந்து தொடர்ந்து வந்த குற்றச்சாட்டுகளைத் தொடர்ந்து புகார்களுக்கு மதிப்பளிக்கும் விதமாக தற்போது மயோனஸ்க்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த சில தினங்களுக்கு முன் ஐதராபாத்தில் மோமோஸ் உணவை உட்கொண்டதால் ஒருவர் உயிரிழந்தார். மேலும், 15 பேர் உடல் உபாதைகள் காரணமாக மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுனர். இது தொடர்பாக நடந்த ஆய்வில், இந்த உபாதைகளின் பின்னால் முட்டையிலிருந்து செய்யப்படும் மயோனைஸ் இருப்பது தெரியவந்துள்ளதாக தெலங்கானா உணவுப் பாதுகாப்பு ஆணையர் தெரிவித்துள்ளார். இந்த நிலையில், முட்டையிலிருந்து தயாரிக்கப்படும் மயோனைஸ் வகைகளுக்கு ஓராண்டு காலம் தடை விதிக்கப்படுவதாக தெலுங்கானா அரசு உத்தரவிட்டுள்ளது.

Read more ; மேயர் பிரியா அதிரடி…! 9 விளையாட்டு மைதானம் தனியாருக்கு கொடுக்கும் தீர்மானம் ரத்து…!

English Summary

Telangana bans raw-egg Mayonnaise for a year amid food safety concerns

Next Post

அமரன் படம் எப்படி இருக்கு? படம் பார்த்துவிட்டு முதல்வர் ஸ்டாலின் கூறிய விமர்சனம் இதோ..

Thu Oct 31 , 2024
How is Amaran movie? Here is CM Stalin's review after watching the film..

You May Like