தெலுங்கானா மாணவர் நுகரபு சாய் தேஜா, பெட்ரோல் பங்கில் நடந்த கொள்ளைச் சம்பவத்தில் பரிதாபமாக சுட்டுக் கொல்லப்பட்டதை அடுத்து, சிகாகோவில் உள்ள இந்திய துணைத் தூதரகம் உடனடியாக நடவடிக்கை எடுக்கக் கோரியுள்ளது.
வெளியான தகவலின்படி, தெலுங்கானாவை சேர்ந்த சாய் தேஜா நுகராப்பு என்ற மாணவன் சிகாகோவில் எம்பிஏ பட்டப் படிப்பு படிக்கும் நேரம் தவிர எஞ்சிய நேரத்தில் பெட்ரோல் நிலையத்தில் அவர் வேலை செய்து வந்தார். திடீரென்று வந்த மர்மக் கும்பல் ஒன்று சாய் தேஜாவைச் சுட்டுவிட்டுத் தப்பியது. என்ன காரணத்தால் அவர்கள் சுட்டார்கள் என்ற விவரம் வெளிவரவில்லை..
அந்தச் சம்பவத்தில் தொடர்புடைய குற்றவாளிகளுக்கு எதிராக உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு சிகாகோ நிர்வாகத்தை அங்குள்ள இந்தியத் தூதரக அலுவலகம் வலியுறுத்தி உள்ளது. இதுதொடர்பாக இந்திய தூதரகம் எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “இந்திய மாணவர் நுகரபு சாய் தேஜாவின் கொலையால் நாங்கள் அதிர்ச்சியும் ஆழ்ந்த வருத்தமும் அடைந்துள்ளோம். குற்றவாளிகள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கக் கோருகிறோம். பாதிக்கப்பட்டவரின் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுக்கு தூதரகம் அனைத்து உதவிகளையும் செய்யும்.
இந்த கொடூரமான கொலையை அடுத்து, வெளியுறவுத்துறை அமைச்சர் டாக்டர் எஸ். ஜெய்சங்கரும் இந்த சம்பவத்திற்கு வருத்தம் தெரிவித்துள்ளார். சாய் தேஜாவின் சோகமான இழப்புக்கு தனது இரங்கலைத் தெரிவித்த அவர், சிகாகோவில் உள்ள இந்திய துணைத் தூதரகம் துக்கமடைந்த குடும்பத்திற்கு அனைத்து உதவிகளையும் செய்து வருவதாகவும் மீண்டும் வலியுறுத்தினார்.
Read more ; விமான எரிபொருள் விலை அதிரடி உயர்வு.. டிக்கெட் கட்டணம் உயர வாய்ப்பு..!!