தெலங்கானாவில் அக்டோபர் 24 முதல் 1 முதல் 10 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு காலை உணவுத் திட்டம் தொடங்கப்பட உள்ளது.
தெலங்கானா அரசு தசரா பரிசாக மாநிலம் முழுவதும் உள்ள அரசுப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு ‘முதல்வரின் காலை உணவுத் திட்டத்தை’ அறிமுகப்படுத்தியது. அக்டோபர் 24 முதல் 1 முதல் 10 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு இந்த திட்டம் செயல்படுத்தப்படும். மாணவர்களுக்கு தரமான கல்வியுடன் நல்ல சத்தான உணவை வழங்குவதே இத்திட்டத்தின் முக்கிய நோக்கமாகும். இந்த திட்டத்திற்கு, மாநில அரசு, ஆண்டுக்கு, 400 கோடி ரூபாய் கூடுதல் செலவாகும் என தெரிவித்துள்ளது.
முதலமைச்சர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, ஏழைக் குடும்பத்தைச் சேர்ந்த மாணவ, மாணவியருக்கு சத்தான உணவு வழங்குவதுடன், படிப்பில் அவர்களின் கவனத்தை அதிகரிக்கவும் அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. விவசாயத் தொழிலாளர்களாக இருக்கும் மாணவர்களின் பெற்றோர்கள், காலையிலேயே வேலைக்குச் செல்வதற்காக வீடுகளை விட்டு வெளியேறும் சிரமங்களை முதல்வர் புரிந்து கொண்டார்.
தமிழகத்தில் இத்திட்டத்தை செயல்படுத்துவது குறித்து ஆராய ஐஏஎஸ் அதிகாரிகள் குழுவை கேசிஆர் சமீபத்தில் அனுப்பினார். அந்தக் குழு அழித்த அறிக்கையின் படி மாநிலத்தில் காலை உணவு திட்டம் செயல்படுத்த உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.