fbpx

ஐயா என் செருப்பை காணோம்…..! காவல் நிலையத்தில் புகார் கொடுத்த சீரியல் நடிகை….!

சென்னை கேகே நகர் பி டி ராஜன் சாலையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருபவர் சங்கீதா நடிகர் விஜய்யின் மாஸ்டர், ஆர்.ஜே பாலாஜி நடிப்பில் வெளியான வீட்டுல விசேஷம் போன்ற திரைப்படங்களில் சிறிய கதாபாத்திரத்தில் இவர் நடித்திருக்கிறார் அதேபோல சின்னத்திரையில் ஆனந்த ராகம் என்ற தொடர் உள்ளிட்ட பல்வேறு தொடர்களில் இவர் நடித்து வருகின்றார்.

இந்த நிலையில், வீட்டு வாசலில் இருந்த இவருடைய காலனி உள்ளிட்ட பொருட்கள் சில தினங்களாக தொடர்ந்து காணாமல் போயிருக்கிறது. இதன் காரணமாக, அவர் நேற்று முன்தினம் கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்த போது உயர்வாக இருசக்கர வாகனத்தில் வந்த 2 பேர் பூட்டி இருந்த வீட்டை நோட்டமிட்டு அதன் பிறகு பின் காலால் அந்த செருப்பை லிப்டில் தள்ளிவிட்டு திருடி சென்றுள்ளனர். இது குறித்து நடிகை சங்கீதா வீடியோ ஒன்றையும் வெளியிட்டுள்ளார்.

பாதுகாப்புக்காக அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வரும் நிலையில், இருவர் மிகவும் சாதாரணமாக வீட்டிற்கு வந்து செருப்பை திருடிவிட்டு சென்று இருக்கிறார்கள் எனவும், எதற்காக வந்தார்கள் என்று தெரியவில்லை அது கிடைக்காததால் செருப்பை திருடி சென்றிருக்கிறார்கள் என்றும் தெரிவித்ததோடு எச்சரிக்கையாக இருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டிருக்கிறது என்றும் அவர் அந்த வீடியோவில் தெரிவித்துள்ளார்.

அதோடு வயதான தாய் மற்றும் குழந்தைகளோடு தனியாக வசித்து வருவதால் கேகே நகர் காவல் நிலையத்தில் புகார் வழங்க உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Next Post

சமூக வலைத்தளம் மூலமாக ஏற்பட்ட பழக்கம்…..! காதலியின் அந்தரங்க வீடியோவை வெளியிடுவதாக மிரட்டிய முன்னாள் காதலன் அதிரடி கைது…..!

Sun Jun 11 , 2023
சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே மஞ்சினி கிராமத்தை சேர்ந்தவர் சுரேஷ்குமார் (32) பட்டதாரியான இவர் பிரபல சமூக வலைதளமான இன்ஸ்டாகிராமின் மூலமாக சென்னையை சேர்ந்த 23 வயது பட்டாபரிய இளம் பெண்ணுடன் நட்பாக பழகி வந்தார். இது இருவருக்கு இடையில் நாளடைவில் காதலாக மலர்ந்த நிலையில், இருவரும் கடந்த நான்கு மாதங்களாக காதலித்து வந்ததாக தெரிகிறது. ஆகவே தன்னுடைய காதலியான இளம் பெண்ணுடன் சுரேஷ்குமார் தனிமையில் உல்லாசமாக இருந்திருக்கிறார். அத்துடன் […]

You May Like