fbpx

இன்னும் 2 நாட்களுக்கு வெப்பநிலை அதிகமாக இருக்கும்.. வானிலை மையம் தகவல்..

தமிழகத்தில் இன்னும் 2 நாட்களுக்கு இயல்பை விட அதிக வெப்பநிலை பதிவாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது..

சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் “ இன்று முதல் வரும் 17-ம் தேதி வரை, தமிழ்நாடு, புதுவை, காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும்.. இன்றும் நாளையும், தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலை, இயல்பை விட 2 – 3 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கும்.. வரும் 18-ம் தேதி, தமிழ்நாடு, புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும்…

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும்.. அதிகபட்ச வெப்பநிலை 36 – 37 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 25 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும்.. கடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் எங்கும் மழை பதிவாகவில்லை.. தமிழகம் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவியது.. சேலத்தில் அதிகபட்சமாக 40.8 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவானது..” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Maha

Next Post

“ அண்ணாமலை செய்தது அரசியல் ஸ்டண்ட்..” அமைச்சர் துரைமுருகன் விமர்சனம்...

Fri Apr 14 , 2023
தமிழக பாஜக தலைவர் கட்டியுள்ள ரஃபேல் வாட்ச் விவகாரம் கடந்த சில மாதங்களுக்கு முன்பு மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது.. ரஃபேல் வாட்சின் பில்லை தர வேண்டும் என்று மின் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி கேள்வி எழுப்பிய நிலையில், அதற்கு பதிலளித்த அண்ணாமலை ரஃபேல் கடிகாரத்தின் ரசீது தன்னிடம் உள்ளதாக கூறிவந்தார்.. இதை தொடர்ந்து ரசீது எங்கே என்று சமூகவலைதளங்களில் பலரும் கேள்வி எழுப்பி வந்தனர்.. பின்னர் ஏப்ரல் 14-ம் […]
அடிக்கடி உடல்நலக்குறைவு..!! மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் துரைமுருகன்..!! திமுகவினர் கவலை..!!

You May Like