கடந்த 140 ஆண்டுகளாக இல்லாத அளவிற்கு இந்தாண்டு ஜூலை மாதத்தில் வெப்பம் பதிவாகி இருப்பதாக நாசா அறிவித்துள்ளது. புவி வெப்பமடைதலை கட்டுப்படுத்த உடனடி நடவடிக்கை எடுக்குமாறும் வலியுறுத்தி உள்ளது.
இது குறித்து நாசா வெளியிட்டுள்ள அறிவிப்பில்; 1880க்குப் பிறகு இந்த ஆண்டு ஜூலை மாதம் வெப்பத்தின் தாக்கம் அதிக அளவில் பதிவாகியுள்ளது. உலகெங்கிலும் இன்னும் யாரும் எதிர்பார்க்காத அளவிலான பேரழிவுகள் நிகழ வாய்ப்புள்ளது. உலகெங்கிலும் உள்ள பில்லியன் கணக்கானவர்கள் உண்மையில் உணர்ந்ததை நாசா தரவு உறுதிப்படுத்துகிறது:
ஜூலை 2023 இல் வெப்பநிலை வரலாறு காணாத அளவில் பதிவானதை அடுத்து வெப்பமான மாதமாக நாசா அறிவித்துள்ளது. நாட்டின் ஒவ்வொரு மூலையிலும், அமெரிக்கர்கள் தற்போது காலநிலை நெருக்கடியின் விளைவுகளை நேரடியாக அனுபவித்து வருகின்றனர்” என்கிறார் நாசா நிர்வாகி பில் நெல்சன்.
அறிவியல் தெளிவாக உள்ளது. நமது சமூகங்களையும் கிரகத்தையும் பாதுகாக்க நாம் இப்போது செயல்பட வேண்டும்; நம்மிடம் இருப்பது அது மட்டுமே. ஜூலை 3 முதல் ஆகஸ்ட் 7 வரை 36 நாட்கள் வெப்பநிலை முந்தைய பதிவை விட அதிகமாக இருந்தது என்றார்.